Sunday, 23 February 2025

Gilead Series by Marilynne Robinson

 

 

I'm uncertain about what led me to read Marilynne Robinson's 'Gilead', a book titled after the Midwestern town of Gilead, where the story takes place. One of the reasons why I persevered in reading this book was a curiosity about the historical Protestant Christian underpinnings of American society. While that was my initial draw, I also grew captivated by the vivid character portraits Robinson crafts across these four linked novels. There is nothing that could be considered a worthy plot line that runs through or across these novels other than Jack's doomed love affair with a colored woman, if at all it could be deemed as such. That effectively makes these novels a vivid sketch of characters through the passage of time along with their ruminations which are often theologically Christian in nature.
          Although the storyline of Marilynne Robinson's first novel 'Gilead' centers on Rev. John Ames and his family history, it also offers a glimpse into the lives of other characters who later star in their own novels. These would include Rev. Robert Boughton and his tangled and complicated son Jack and Lila an orphaned girl who has lived most of her life as a vagabond before eventually marrying the elderly Rev. Ames and settling into a life of uncertain domesticity.  These novels were written and published over a 16 year long period. I read through all the four novels, and my first advice to readers would be that it can often feel cumbersome reading them, especially the latter two novels 'Lila' and 'Jack'. A possible cause for this cumbersomeness could be attributed to a tendentious repetition that stems from Mrs. Robinson's desire to finetune the description of the inner world of her characters. But this tendentiousness is maybe to an extent balanced by the wonderfully poignant passages that are strewn across these novels as well as the brilliant rendering of some of the characters who inhabit these pages. And what better person     

        I would start    

Wednesday, 3 January 2024

இலங்கைப் போர் - மூன்று பெண்களின் வாழ்க்கையும், எழுத்துகளும் - பாகம் 3

 என் எணணங்கள்

நான் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல், இந்த போராட்டத்தை பற்றி எனக்குள் எழுந்த கேள்விகளும் அதற்கு என் வாசிப்பில் தோன்றிய புரிதல்களையும் ஒரு வினா விடை வடிவமைப்பில் இப்பகுதியில் எழுதுகிறேன்.

கேள்விஏன் இந்த சண்டை இருபதாவது நுற்றாண்டில், ஆஙகிலேய அட்சியில் இருந்து விடுதலை பெற்ற பின் ஏற்பட்டது?. இலங்கையின் முந்தைய வரலாற்றில்  இப்படியோறு சச்சரவுக்கு உதாரணங்கள் ஏதும் உள்ளனவா ?

விடை:  இலங்கையில் இனக் கலவரம் என 19வது நுற்றாண்டுக்கு முன்னர் வரலாறு இல்லை என்றாலும், இலங்கையின் தெற்கு பகுதியில் பௌத்த சிங்கள அரசுகளும், வடக்கில் தமிழ் இந்து அரசுகளும் மேலோங்கி இருந்தன. தமிழ் அரசர்களுக்கும், சிங்கள அரசுகளுக்கும் இடையே சச்சரவுகள், படையெடுப்புகள் இருந்தாலும் வரலாற்றாசிரியர்கள் அவற்றை இன பிரச்சனை என்று வகைப்படுத்துவதில்லை. சிங்கள அரசர்கள் கூலிபடைகளாக தமிழகத்தில் இருந்து தமிழ் வீரர்களை வரவழைத்தனர். அவர்கள் நாளடைவில், சிங்கள சமுதாயத்தின் ஒரு சாதியாக உள்வாங்கப்பட்டனர். சிங்கள அரசர்கள் தமிழ் அரசிகளை மணம் செய்து கொண்டனர். சிங்களர்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு இடையே அடர்ந்த காடுகள் இருந்தமையால், படையெடுக்கும் பேரரசுள் இல்லாத தருணங்களில் தொடர்புகள் குறைவாகவே இருந்தது.

ஆங்கிலேய அரசாட்சி காலத்தில் தான் முதன் முறையாக சிங்களர்களில் சிலர், பெளத்த, ஆரிய சமுதாயம் என்ற அடையாளத்தை தங்களுக்கு உருவாக்கி கொன்டனர். தங்களை இலங்கையின் மூலக் கலாச்சார இன மக்கள் என்றும், தமிழர்கள்களை தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் எனவும், சிங்கள மக்களின் விரோதிகள் என்றும் பாவிக்கப்பட்டனர்.  இலங்கையில் இப்பேர்ப்பட்ட கருத்துகளுக்கு முன்னோடியாக இருந்தவர் "அநாகரிக தர்மப்பாலா" (Anagarika Dharmapala). சிங்கள பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.  அவருடைய வார்த்தையில், இலங்கையின் வரலாற்றை பற்றி சுருக்கமாக கூறுவோமானால், "இந்த பிரகாசமான, அழகான தீவு காட்டுமிராண்டித்தனமான நாசகாரர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பு ஆரிய-சிங்களவர்களால் சொர்க்கமாக மாற்றப்பட்டது. கிறிஸ்தவம் மற்றும் பலதெய்வ மதம் [அதாவது இந்து மதம்] , மிருகங்களைக் கொல்வது, திருடுவது, அநாகரீகம் செய்வது, பொய் சொல்வது மற்றும் குடிப்பழக்கம்  போன்ற மோசமான செயல்களை இங்கு அறிமுகப்படுத்தியது".  ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன் இப்படிபட்ட கருத்துகளை எவராலும் கனவிலும் சிந்தித்திருக்க முடியாது. 19வது நுற்றாண்டு நியுயார்க் நகரத்தில் (New York) ஆதிக்க மேற்கத்திய கிருத்தவ கலாச்சாரத்திற்கு முரணாக கிழக்கில் தோன்றிய ஆண்மீகம் மற்றும் மதங்களான இந்து, பெளத்தம் ஆகியவற்றில் தான் உண்மையும் மெய்ஜானமும் உள்ளது என்ற பிற்போக்கான (reactionary) கருத்தை வைத்தது பிரம்ம ஜானம் (theosophy). இந்த பிரம்ம ஜான இயக்கத்தின் உறுப்பினராக இருந்த  தர்மப்பாலா,  அதன்  தாக்கத்தில் தான்,  தன்னுடைய சிங்கள பெளத்த மேன்மைவாத கொள்கை நெறிகளை உருவாக்கினார். சில eccentric ஐரோப்பியர்கள் (Olcott, Blavatsky, Annie Besant), தங்கள் கலாச்சாரத்தின் அறிவுதள குறைபாடுகள், அதிருப்திகளை நிறைவு செய்ய உருவாக்கிய கற்பனை நிறைந்த நம்பிக்கைகள்,  தர்மப்பாலாவின் கையில் சதையும், எலும்பும் உள்ள சிங்கள பெளத்த தேசியவாதமாக உயிர் பெற்று, காலப்போக்கில் தமிழ் இனப் படுகொலைக்கு வழி வகுத்தது. 

சிங்களர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய மற்றோரு காரணம் ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட அதிகாரத்துவ அமைப்பு (bureaucracy). இந்த அதிகாரத்துவ அமைப்பின் அரசு வேலைகளின் பெரும் பாகத்தை , யாழ்ப்பாணத்தின் மேல் சாதி வேளாளர்கள் பெற்றுக் கொண்டது.

கேள்வி: தமிழ் சமூகத்தின் மனோபாவம் இக்காலங்களி்ல எப்படி பட்டதாக இருந்தது?. தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்த சவாலை எவ்வாறு சந்தித்தனர்?.

விடை:  சாதி சமூகத்திற்கே உள்ளார்ந்த குணங்களான படைப்பாற்றல் இல்லாமை, செல்வாக்குக்கும், அந்தஸ்துக்கும் மூர்க்க வெறியுடன் போட்டியுடும் மனப்பாண்மை எல்லாம் தலையோங்கி நின்றது. தமிழ் மக்களில் கலாச்சார மேண்மை அடைந்தவர்களாக கருதப்பட்ட யாழ்ப்பான வேளாளர்களின் முயற்சி முழுவதும் அரசாங்க உத்தியோகஸ்தை அடைய வேண்டும் என்பதே. தமிழினி கூறும் ஒரு நிகழ்வு இலங்கை தமிழர்களின் மனப்பாண்மையை விளக்குவதற்கு உதவும். புலிகளின் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு மாணவி ஒருவள் ஆயுத பயிற்சிக்கு அனுப்பபடுகிறாள். மகளை  தேடி தந்தை வருகிறார். தமிழினி தான் விடுதலைப் புலிகள் சார்பாக அவரை எதிர் கொள்ள வே்ண்டியிருந்தது. தமிழினியிடம் அவர் சொன்னது  "தங்கச்சி , நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை; போகட்டும் , ஊரோட ஒத்ததுதான் எனக்கும் . ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா (Doctor) எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது , நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம் . அத நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு"சமூக நிலை குறித்த பதற்றம், சாமானிய மக்கள் மத்தியிலும் ஊறி இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.

இலங்கை விடுதலை பெறும்போது ஏற்பட்ட மிகப் பெரிய கேள்வி, தேயிலை தோட்டங்களில் வேலைக்காக  கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து வந்து, பின்னர் இலங்கையிலே நிரந்தரமாக தங்கியவர்களுக்கு சட்டபடி குடியுரிமை அளிப்பதா என்பதை பற்றி. பெரும்பாலான இத்தமிழர்கள் கீழ் சாதியினராக இருந்தபடியால் என்னவோ, அப்போது தலைமை வகித்த யாழ்ப்பான மேல்மட்ட தமிழ் அரசியல்வாதிகள் சக தமிழர்களின் இப்பிரச்சினைக்கு அக்கறை காட்டவில்லை. தமிழ் சமுதாயமும், தமிழர்களும் சுயநலவாதிகள் என்று பரவலாக நம்பப்பட்ட நம்பிக்கைகள் இவ்வாறான அரசியல் தீர்வுகளால் வலுப்பெற்றது. சிங்கள இனவாதம் காலப்போக்கில் தீவிரமடைந்து தமிழர்களுக்கான அரசு வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட போது அதனை படைப்பாற்றலுடன் கையாள தமிழ் சமுதாயத்திற்கு முடியவில்லை. படிப்பும், அதில் இருக்கும் அந்தஸ்தையும் தங்கள் சொந்த அடையாளமாக கருதிய யாழ்ப்பான நடுத்தர மக்களுக்கு, வாழ்க்கைக்கு வேறு வழியே இல்லாத இருட்டாக எதிர்காலம் தோன்றியது. தங்கள் சொந்த கால்களில் நின்று தொழில்களையோ, இலங்கையின் கிழக்கில் விவசாயத்திற்கு திறக்கப்பட்ட வெறுமையான நிலங்களை பயிர் செய்யவோ அவர்கள் மனோபவம் அனுமதிக்கவில்லை. இதற்கு மாறான உதாரணமாக தென் அப்ரிக்காவில் உள்ள வெள்ளயர்களின் அனுபவத்தை கூறலாம். நிறவெறி (apartheid) ஆட்சியின் முடிவுடன், அரசு வேலைகள் கறுப்பர்களுக்கு அதிகமாக ஒதுக்கப்பட்ட போது, வெள்ளயர்கள் அதனை பெரிதாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ஜாதிய ( ஆனால் இனவாதிகள்- racist's) மனோபாவம்  அவர்களுக்கு இல்லாததால் தொழில் மற்றும் விவசாயத்தில் தங்களுக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொண்டனர். அவர்கள் கலாச்சாரத்தில், பொருள் சார்ந்த  உலகத்தில் செய்யும் வேலைக்கு ஆங்கீகரிப்பு (respect for work in the material world) மற்றும் சமூக அந்தஸ்த்து தான் வாழ்க்கையின் தேர்வுகளை நிச்சயித்தல் போன்றவை இல்லாததால் அவர்களால் மாற்றங்களை வெற்றிகரமாக கடந்து வரமுடிந்தது.

தமிழர்கள் சிலர் மேற்கத்திய உலகிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். தமிழ் அரசியல் தளமானது, நிதர்சனத்தை மறுக்கும் மேடை பேச்சாளர்களின் டம்பமும் லாவகமுமான பேச்சால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதில் தமிழ் நாட்டில் இருந்து சென்ற திராவிட இயக்கத்தாருக்கும் பெரும் பங்கு உண்டு என்பது இலங்கையில் அப்போது  வாழ்ந்த என் உறவினர்களின் கருத்து. எதிர் தரப்பினை துரோகிகள் என்று கூறுவதும், எதிர்வினைகளை யோசிக்காமல்  வன்முறையை கூவிடும் சொற்பொழிவுகள் நிகழத்துவதும் சாதாரணமாகியது. இதுவே தமிழ் அரசியலில் நடந்த முதல் கொலைக்கும் வழி வகுத்தது. ஆல்ஃப்ரெட் துரையப்பா யாழ்ப்பான நகரத்தின் மேயராக இருந்த போது பிரபாகரனும் அவனுடைய கூட்டாளிகளாலும் கொல்லப்பட்டார். சாமானிய மக்களிடேயே நற்புகழ் பெற்ற அவர், நகரின் குடிமை பணிகளில் தன் முழு ஆற்றலையும் செலவளித்தார். தமிழ் தேசியத்திலோ, தேசிய அரசியலிலோ அவருக்கு ஆர்வம் இல்லை. தன் பணிகள் நிமித்தமாக, சிங்கள அரசியல்வாதிகளுடன் கூட்டணி வைத்திருந்தார். தங்களுடைய தமிழ் தேசிய கொள்கைக்கு இணங்கவில்லை என்பதற்காக இனத் துரோகி என்ற பட்டத்தை அவர் மேல் சாத்தினார்கள்.  அரசியல்வாதிகளின் உணர்ச்சிகரமான வசைப் பேச்சு, அரசியல் புரிதலே இல்லாத இளவயது பிரபாகரன் கையில்  கொலையாக மாறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் செயல்படும் வரையைறகள், அதில் அவர் பிரபலமாக இருப்பதற்குறிய காரணங்கள் பற்றிய புறிதலோ, மரியாதையோ இல்லாமல் ஒரு உணர்ச்சிவசப்பட்ட மேலீடான பார்வையே தமிழ் அரசியலின் மோசமான முடிவுகள் பலவற்றிற்கு காரணமாயிற்று.  தமிழினியின் கூரிய பார்வைக்கு இது மறையவில்லை. தன் புத்தகத்தில் ஓரிடத்தில், விடுதலைப் புலி இயக்கத்தில் தான் இணையும் தருவாயை இவ்வாறு எழுதுகிறாள். "எமது மூத்த அரசியல் தலைவர்கள் மேடைகளில் செய்த போர்ப் பிரகடனங்களுக்காக இளைய தலைமுறையின் வாழ்வு, யுத்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்காக இளைய தலைமுறையினர் அந்த நெருப்புக்குள் ஆவேசத்துடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள்".

நாளடைவில் தமிழ் சமுதாயத்தின் பாதையை நிர்ணையி்ப்பது துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் இருபது வயது இளைஞர்களிடம் சென்றடைந்தது. 

கேள்வி: தமிழ் போராளி இயக்கங்களுக்கு நடுவில் ஏன் வன்முறை தலைவிரித்தாடியது?. தமிழ் ஈழ போராட்டம் சிறிதளவும் பெருந்தன்மையோ,  இரக்கமோ இல்லாதது போல் ஏன் காட்சியளிக்கிறது? 

விடை:  "ஈழப் போரில் எனது சாட்சியம்" என்று கனேச ஐயர் எழுதிய புத்தகத்தில் அவர் கட்டற்ற வண்முறைக்கு காரணம், மக்களில் இருந்து தனிப்பட்டு,  இரானுவ தளத்தில் மட்டும் போராளி இயக்கங்கள் செயல்பட்டதே என்கிறார். மக்களுடைய ஆதரவை நம்பி இயக்கங்கள் வேலை செய்திருந்தால், சில வரம்புகளுக்குள் இயங்க வேண்டிய நிலமை இருந்திருக்கும். நிதி தேவைக்கு வங்கிகளை கொள்ளையிடுவதும், வணிகர்களை மிரட்டுவதும் ஆரம்பம் முதலே போராளிகள் பின்பற்றிய வழிமுறை. பின்னர் இந்திய (RAW) , தமிழக அரசின் பண உதவிகளும், இறுதியில் மேற்கத்திய நாடுகளுக்கு சென்ற அகதிகளிடம் திரட்டிய காசும், பொறுப்பற்ற நடத்தைகள் நடக்கும் இந்த சூழலை நீடிக்க வைத்தது. 

போராளிகள் இயக்கங்களுக்கு இடையே எழுந்த சண்டைகளில், விடுதலைப் புலிகள்(LTTE) கொடூரமாக சக தமிழ் போராளிகளை அழித்தனர். பின்னர் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஓரேப் பிரதிநிதியாய்; பிரபாகரன் என்ற ஒருவரின் தலைமைக்கு கீழ் செயல்பட்டனர்.  எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய விடையம், பிரபாகரன் என்ற ஆளுமை இல்லாமல் தமிழ் ஈழ போராட்டம் இத்தனை வலிமையானதாகவும், இவ்வளவு காலம் நீடித்து இருந்திருப்பதற்கும்  சாத்தியம் இல்லை. இவ்வியக்கத்தின் பரிணாம வளர்ச்சியையும், பிரபாகரனின் ஆளுமையையும் ஆராயும் போது, வண்முறையின் விதைகளையும், அது வளர்ந்து வியாபித்த விதத்தையும் காணலாம். 

 தமிழீள விடுதலை இயக்கங்களில் ஆரம்ப காலத்தில் முக்கிய உறுப்பினராக இருந்த கனேச ஐயர், பிரபாகரனின் பங்கை பற்றி இவ்வாறு கூறுகிறார்,"(ஈழப் போராளிகள்) இயக்கமானது பிரபாகரனது விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார் . உண்ண உணவும் , உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார் . இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை . இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார்".  பிரபாகரனின் குணத்தை பற்றி இன்னொரு இடத்தில் குறிப்பிடும் போது "இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்லை. சினிமா கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக இருந்தது . அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார் . இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்தித்தது கிடையாது . எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்தித்தது கிடையாது".

பிரபாகரனின் குணசீல சித்திரத்தை நம்மால் யூகிக்க முடிகிறது. தான் வைத்த இலக்கை அடைய அர்ப்பணத்தோடு செயல்படும் ஆற்றல், அதனோடு கூட ஒரு ஒற்றை பரிமாணமான ஆளுமையாகவும் தோன்றுகிறார். வேறு ரசனைகளே இல்லாமல், இராணுவம், இராணுவ உத்திகள், பேரொழுங்கு உள்ள இராணுவங்களை கட்டியெழுப்பும் தலைவர்கள் ( பொதுவாக இரண்டாம் யுத்த ஜெர்மானிய படை) மீது ஈர்ப்புடைய  இளைஞர்களை எல்லாத் தலைமுறைகளிலும் பார்க்கலாம். அப்படிபட்டவராகவே பிரபாகரன் எனக்கு தென்படுகிறார்.

இயக்கத்தின் ஆரம்பக் கொலைகள் நடக்கும் போது  பிரபாகரன்  சொல்லும் சொற்றொடராக கனேச ஐயர் இதனை குறிப்பிடுகிறார், 'கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும்'.   எனக்கு இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது தோன்றிய எண்ணம், பிரபாகரனின் மனதில் அரசியல் கொலை என்பது போராளி இயக்கங்கள் சில அரசியல் அவசியங்களுக்காக செய்யும் செயலாக இல்லாமல், தனிப்பட்ட மனிதனின் மனதைத் திடப்படுத்தக் கூடிய  ஒழுக்க செயலாக மாறுகிறது என்பதே. கொலை என்பது, சமூகக் கட்டுப்பாடுகளினால் தடை (social taboo) செய்யப்பட்ட, மிகவும் எச்சரிக்கையும் விழிப்புணர்வுடன் அணுகும் செயலில் இருந்து, தனி மனித உணர்ச்சிகளின் ஒரு சாதாரணமான விடையமாக மாறிவிடுகிறது. இலங்கை கலவரத்தில் கொடூர வண்முறை செயல்களில் தனி மனித உணர்ச்சிகளினால் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டனர்.  ஆனால் அதற்கு நிறுவன அங்கீகாரமும், தார்மீக அந்தஸ்தும் பிரபாகரன் என்ற அளுமையின் கீழ் கட்டமைக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் தான் முழு பொலிவுடன் காணமுடிகிறது.  இயக்கமும் அதன் தலைவருக்கும் கேள்வியே கேட்காத சுய பலியீடு செய்யும் தியாகத்தை எதிர்பார்ப்பதிலும், மாறுயோசனை உள்ள யாவரும் துரோகிகளாக பார்க்கப்படுவதிலும், இயக்கத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையை புனிதமயமாக்குவதிலும் (எ.கா - காதலிப்பவர்களுக்கு ஆரம்ப காலத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டது), விடுதலை புலி இயக்கம் ஒரு வழிபாடு மறபாக (cult) உருவெடுத்தது. அப்படி உருவெடுத்ததின் காரணம் பிரபாகரனின் மனதின் அசாதாரண செயல்பாடே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போக்கு வெளியுலகத்து அரசியலினால் நிர்ணயிக்கபடாமல், அதன் அகத் தர்க்கங்களினால்(internal logic) நிச்சயிக்கப்பட்டன. 

பென் பேவின்க் ( Ben Bavinck)  என்ற டச்சு மிஷனரி 54 வருடங்கள் இலங்கையின்  தமிழ் பகுதிகளில் மக்களுக்கு தன்னலமற்றமாக தொண்டாற்றியவர். இரண்டாம் உலக போரின் கோரத்தை தன் கண்ணூடாக பார்த்த இவர், ஐரோப்பாவில் பாசிச சக்திகளுக்கு எதிரான போரட்டத்தில் தன் சொந்த பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலமையிலும் பங்கேற்றவர்.  அவர் 1950களில் முதல்  சாமானிய தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்தமையாலும்,  மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர் பண்புடைய அந்நிய நாட்டு மனிதர் என்ற வகையிலும் அவர் எழுதிய நாட்குறிப்புகள் மிகவும் முக்கியமானது. பொதுவாகவே வண்முறையை வெறுத்து, மற்றவர்களைப் பற்றி நல்லதையே யோசிக்கும் மனிதரான அவர் கூட புலிகள் இயக்கத்தின் செய்கைகளை குறித்து எரிச்சலடைகிறார். இப்பிரச்சினைக்கு பிரபாகரனின் அழிவைத் தவிர வேறு வழி இல்லை என வண்முறையை ஆட்சேபிக்காத நிலைக்கு தள்ளப்படுகிறார்.        

1978ம் ஆண்டில் இலங்கையின் தேசிய விமான சேவையின் ஒரே ஆவ்ரோ (Avro) விமானத்தை புலிகள் வெடி வைத்து தகர்த்தனர். இதன் பிரதிபலிப்பாக எல்லோர் கவனமும் விடுதலைப் புலிகள் இயக்கம் மேல் பாய்ந்தது. இந்நிகழ்வின் திட்டமிடும் குழுவில் இருந்த கனேச ஐயர் அதன் பிண்ணனியில் நடந்ததைப் பற்றி  விவரிப்பது ஆரம்ப காலத்து இயக்க உறுப்பினர்களின் எண்ணப்போக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. விமானத்தில் நேரக்குண்டை எப்போது வெடிப்பது என்ற கேள்வி எழும்போது அதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என்ற அக்கறை யாருக்கும் எழவில்லை. ஆனால் அக்குழுவில் ராகவன் என்ற போராளி அப்பாவி மக்களின் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று உறுதியாக வாதிட்டத்தால், யாவரும் இறங்கிய பின்னர் வெடிக்கும்படி நேரக்குண்டு அமைக்கப்பட்டது. இயக்கத்தில் சர்வாதிகார போக்கு இறுக்கமாக நிலைகொள்ளுவதற்கு முன்னால் இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள் இருந்தன.  

மைக்கல், பற்குணராஜா என்ற இருவர் பிரபாகரனால் கொல்லப்பட்டனர். அவர்கள் இயக்கத்திற்கு எதிராக செயல்படாத நிலையில், தகுந்த காரணமில்லாமல் சர்வாதிகரமாக செய்யப்பட்ட செயல்களாக பலரால் இவை கருதப்பட்டது . வெறும் பயத்தினாலும், சந்தேகத்தினாலும் செய்யப்பட்ட இக்கொலைகளை பற்றி சுய விமர்சனத்தோடு, தவறுகளை சரி செய்யும் வண்ணம் இயக்கம் கடந்து முன் செல்ல வேண்டும் என கனேச ஐயர் கேட்டுகொள்கிறார். பிரபாகரன் தான் செய்ததில் தவறு இல்லை என்று ஆணித்தரமாக பதிலளிக்கிறார். இயக்கத்தின் பாதுகாப்புக்காக செய்ததாக கூறும் பிரபாகரன், அது தவறு என்றால் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்று தன்னை நியாயப் படுத்தி கொள்கிறார். கனேச ஐயரின்   எடுத்துைரத்தலில் இவ்வாறான மூர்க்கத்தனமான நியாயப்படுத்தல்களுக்கு எதிராக தன்னால் ஒன்றும் பேசமுடியவில்லை என்று கூறுகிறார். 

தன் நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் அசையாத, பன்முகத்தன்மையை ஏற்கும் மனோவியல் இல்லாத மனிதன்; நாளடைவில் விடுதலைப் புலி இயக்கத்தின் ஒரே சர்வாதிகாரியான தலைவராகும் போது ஏற்படும் சோக எதிர்வினைகளை நாம் பிற்காலத்தில் கண்களால் கண்டோம். விடுதலைப் புலி இயக்கம் இறுக்கமான, மாறு யோசனைகளை ஏற்காத இயக்கமாக உருமாறுயதின் முக்கிய விளைவு என்று முறிந்த பனை ஆசிரியர்கள் கூறுவது, படித்த நடுத்தர இளைஞர்கள் இயக்கத்தில் சேர தயங்கினார்கள். தொடக்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களும் நாளடைவில் விட்டு சென்றார்கள். இப்படி விட்டு சென்றவர்களில் என் நினைவுக்கு வருபவர்கள் ராகவன், கனேச ஐயர், ரஜனியின் அக்காளான நிர்மலா,   "Tamil Tigress" என்ற நாவலை எழுதிய நிரோமி டி ஸொய்சா (Niromi De Soyza).  இவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் தங்கள் அனுபவங்களை எழுதியவர்கள்.  ஒரு பிரச்சினையை பல் வேறு கோணங்களில் பார்த்து சிந்திக்க வல்லவர்கள்.  இதன் மற்றொரு பக்க விளைவு, மனோபாவத்திலே வண்முறை குணம் உள்ளவர்களுக்கு பெரும் அதிகாரம் இயக்கத்திலும், சமுதாயத்திலும் கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் ஒவ்வொறு பொறுப்பற்ற, மனிதாபிமானமற்ற செயல்களையும் நான் இங்கு எழுத விரும்பவில்லை. அவற்றைப் பற்றி  பல மனதை சோகமாக்கும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  

கேள்வி: வண்முறை இல்லாமல் சுமூகமாக தமிழர்களாலும், சிங்களர்களாலும் இலங்கையில் வாழ்ந்திருக்க முடியுமா ?. பெரும்பான்மை சமூகத்தினர் இனவாத உணர்ச்சிகளால் வண்முறை செயலில் ஈடுபடும் போது சிறுபான்மையினர் எவ்வாறு தங்களை பாதுகாக்க முடியும்?.

பதில்: இதனை பற்றி பல அரசியல் சிந்தனையாளர்கள் எழுத முற்பட்டுள்ளார்கள். நான் இதை பற்றி எழுதுவதெல்லாம் கருத்தளவான (hypothetical) விளக்கங்கள் தான். நிதர்சனமோ, விளக்கின் தீயை நோக்கி பறந்து மாய்ந்து கொள்ளும் ஈசல்களை போல், மக்கள் தமக்கே புரியாத சூழலின் கைப்பாவைகளாக, வெறுப்பு நிரம்பிய நரகத்தை நோக்கி நகர்ந்து மாய்ந்தனர். இந்த அகோர வரலாறு சமூக சிந்தனை உடைய யாவருக்கும் ஒரு பணிவினைத் தரவேண்டும். 

இந்த அறிமுகத்துடன் எனக்கு தோன்றிய எண்ணங்களை இங்கு வைக்கின்றேன். ஜனநாயகம்,  மனித உரிமைகள், தேசிய அரசுகள் போன்றவை  மேற்கத்திய நாடுகளில் இயற்கையாகவே தோன்றியவை. இதற்கு பல்வேறு காரணங்களை சமூகவியலாளர்கள் கூறினாலும் என் புரிதலின் படி அதற்கு காரணம் அவை அதிக பொறுப்பாண்மை சமுதாயங்கள் (high trust societies).மூன்றாம் உலக நாடுகளிலோ இக்கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்நிலை நம்மில் ஒரு பிளவை உருவாக்குகிறது. மேற்கத்திய நெறிகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்முடைய யதார்த்த பின்தங்கிய சமுதாயத்தின் அரசியல் வாழ்வுக்குமான பெரும் பிரிவை நம் மனதால் ஏற்க முடியாமல் ஒரு முரண்பாட்டுடன் வாழ்கிறோம். இது நம் அரசியலை குழப்பத்திற்குள் தள்ளுகிறது. இலங்கை பிரச்சனை  எழுப்பும் அவசர கேள்வி "குறைந்த பொறுப்பாண்மை சமுதாயங்கள் (low trust societies) எவ்வாறு நவீன உலகத்தை எதிர் கொள்ள வேண்டும் ?". 

குறைந்த பொறுப்பாண்மை சமுதாயங்களில்(low trust societies) பொதுவாக வெளிப்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமைகள் மீரல் போன்றவைகள் இலங்கையிலும் காணப்பட்டன. பல மதங்கள், மற்றும் இனங்கள் சேர்ந்து வாழ்வது ஒரு கூடுதல் சிக்கலை இந்த பிரச்சினை உள்ள சூழலில் உருவாக்கியது.  இலங்கையின் அண்மை வரலாற்றில் சிங்கள பேரினவாத கருத்துகள் ஒரு சாராரிடம் இருந்தாலும், சிங்கள சமுதாயத்தின் ஆதிக்க கருத்தாக, வரலாறு ரீதியாக இருக்கவில்லை. சிங்கள சமுதாயம் வர்க்க ரீதியாக மற்றும் இதர வித்தியாசங்களால் பிளவு பட்டு இருந்தது. படித்த மேல் வர்க்க சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருந்த  உறவும், ஒற்றுமையும் அவரவர் சமூகத்திற்குள் அவர்களுக்கு இல்லை. ஜனநாயக இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. மாறாக சிங்கள மேட்டிமைவாத கொள்கையை ஒரு வலிமையான அழுத்த புள்ளியாய் பல்வேறு அரசியல் அமைப்புகள் பயன்படுத்தின. அதன் இறுதி விளைவு யாதொரு அரசாங்கமும் சிங்கள மேலாண்மை கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இலங்கை அரசும் சிங்கள சாயத்தை எடுத்தது. இதன் விளைவு, சிங்களர் அல்லாத அடையாளங்களை கொண்ட இன, மத மக்கள் தங்களை இரண்டாம் தர குடிகளாக உணர்ந்தார்கள். வண்முறை வெடிப்பதற்கு ஏற்ற பகமை சூழல் இவ்வாறு உறுவாயிற்று.

உதாரணத்திற்கு, இலங்கையின் பன்முகத்தன்மைக்கு எதிராக சிங்கள பேரினவாதம் நடத்திய முதல் தாக்குதல் என்று கூறுவோமானால் அரசாங்க அலுவலக மொழியாக சிங்களத்தை 1956ம் ஆண்டு அறிவிப்பு செய்ததை சொல்லலாம். இதனை சிங்கள மக்கள் தமிழர்களை ஓரங்கட்டும் செயலாக பார்க்க முடியுமா?. மேற்கத்திய நாடுகளில் இவ்வாறு ஒரு நடவடிக்கையை அரசு எடுத்தால், அதற்கு வேறு அர்த்தம் இல்லை என்பது என் நம்பிக்கை. ஆனால் இலங்கையில் அதே அளவுகோலை பயன்படுத்தலாமா?. மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளும் , பொதுவான மதிப்புகளும் இல்லாத சிங்கள சமுதாயத்தில் ஒரு வலிமையான அழுத்தக் குழு அரசியலை தங்களுக்கு சாதகமாக திருப்பியமையால் அது முழு சிங்கள சமுதாயத்தின் கூட்டு விருப்பத்தின் வெளிப்பாடு என்று கருத முடியுமா?. ஏனென்றால்  மூன்றாம் உலக நாடுகளில் சமுதாயம் என்ற அடையாளமே திரவத்தன்மையும் ( fluid), கற்பனை நிறைந்ததாய் இருக்கிறது. நாளடைவில் தமிழ் மொழிக்கும் அரசாங்க அலுவலக மொழியாக அந்தஸ்து கிடைத்தது.   இதனால் சிங்கள பேரினவாத உணர்வு அழிந்தது என்று அர்த்தம் இல்லை. 1950 களின் அரசியலில் முக்கிய தலைப்பாக இருந்த இந்த காரியம் 1970,80 களில்  இல்லை. 

1956'ம் ஆண்டில் சிங்களம் மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப் பட்டபோது அதனை எதிர்த்து தேசிய தமிழ் கட்சிகள் அமைதியான "சத்யாகிரகா" ( Satyagraha) போராட்டத்தை நடத்தினார்கள். ஜனநாயக முறையில் அமைதியாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை சிங்கள கும்பல்கள் தாக்கினர். போராட்டத்தில் கலந்தவர்களை தாக்கியது மட்டும் இல்லாமல் கொழும்பு நகரில் வசித்த அப்பாவி தமிழர்களின் வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டன,  தெருக்களில் வேலை நிமித்தமாக நடந்தவர்கள் இரக்கமில்லாமல் அடிக்கப்பட்டனர். பொது அமைதியை பாதுகாக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்த்து நின்றது. வண்முறை கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படவில்லை. 1983'ம் ஆண்டு இதனை விட பல மடங்கு அதிக வெறியோடு தமிழர்கள் தாக்கப்பட்டனர். இத்தகைய மகா வண்முறையை நடத்தியவர்கள் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படவில்லை. அரசியல் தலைவர்களாக அப்போது இருந்தவர்கள் கண்டனம் சொல்லவில்லை. பலர் நியாயப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தோடு பெரும்பான்மையான தமிழர்களுக்கு இலங்கை என்பது பல்மத, பல்லின நாடு என்று இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்தது . என்னுடைய உறவினர்கள் பலர் இச்சமையத்தில் தான் எங்கள் ஊருக்கு திரும்பி வந்தனர். அவர்களுடைய ஏகமனதான கருத்து - தமிழர்கள் வாழ்வதற்கான இடம் இல்லை இலங்கை. 

 தமிழர்களாகிய நாம் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை மட்டும் கேள்விப்பட்டாலும் அது ஒரு பகுதியே. 1950'களுக்கு முன்னர் நடந்த கலவரங்கள் யாவும் மற்ற சிறுபாண்மையினரான முஸ்லீம்கள், கிருத்தவர்கள், மலையாளிகளுக்கு எதிராக நடந்தவை. முல்லிவாய்க்காலில் புலிகளின் அழிவுக்கு பின்னர் சிங்களர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இனக் கலவரங்கள் நடைபெற்றது. இக்கலவரங்களை தவிர்த்து சிங்களர்களுக்கு மத்தியில் ஜனதா விமுக்தி பெரமுனா (JVP)  என்ற இடதுசாரி இயக்கத்தினால் நடத்தப்பட்ட உள்நாட்டு கலகத்தில் 40,000க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் உயிரிழந்தனர். இவை எழுப்பும் கேள்வி பெரும்பாண்மை சிங்கள சமூகத்தின் ஒழுங்கீனமும்,  செயலிழந்த (dysfunctional) நிலமையும் தான் கலகங்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறதா?. செயலிழந்த சமூகம் அதன் நிர்வாணத்தை மறைத்துக் கொள்ளும் மரியாதையான போர்வை தான் சிங்கள தேசியமா?.   

"இலங்கையை எப்படி காண்பது" என்ற வழி காட்டி புத்தகத்தை 1914'ம் ஆண்டு பெல்லா வூல்ஃப் ( Bella Woolf) என்ற ஆங்கில பெண்மனி எழுதினார்கள். நீன்ட நாள் தங்கிய அனுபவத்தின் பின் எழுதப்பட்ட அப்புத்தகத்தில் இலங்கையின் முக்கிய இனக் குழுக்களை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் "தமிழ் கூலியாள் பற்றி இதனை வழங்க வேண்டும். அவனை சிங்களனோடு ஒப்பிடுகையில் சட்டத்தை கடைபிடிப்பவனாக, சமாதமானம் உடையவனாக காணப்படுகிறான். சிங்களர்களிடம் நுனியில் இருக்கும் கோபம் கத்தி கொலையாக மாறுவதற்கு அப்பால் கிராம வாழ்க்கையின் அடி நீரோட்டமாக ஒரு வண்மம் இருக்கிறது ". இது ஒரு இனக் குழு முழுவதையும் ஓரே அச்சு வடிவில் தரிப்பதாக ஆட்சேபிக்கலாம். ஆனால் கொழும்பில் நடந்த  இனக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான சாமானியர்கள்  சூறையாடுவதற்கும், கொலை செய்வதற்கும் கனபொழுதில் ஆயத்தம் அடைவதற்கு ஒரு விளக்கத்தை சமூகவியலாளர்கள கொடுத்தே ஆக வேண்டும். 

தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்பில்லாமலும், தன்னலமாகவும் பேசி, நடந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினரான தமிழர்கள் கொழும்பு போன்ற நகரங்களில் சந்தித்த சூழலை ஒரு போதும் நாம் அவமதிப்பு செய்யலாகாது. முன்னர் கூறியது போல் இதனால் இலங்கையின் அரசியல்வாதிகளும், சமூகமும் ஒரே எண்ணத்தை உடையவர்கள் என்றோ வண்முறையை அங்கீகரிப்பவர்கள் என்றோ நிலைநாட்டுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. மாறாக இலங்கையின் அதிபர்களாக இருந்த சந்திரிகா குமாரதுங்கா ( Chandrika Kumaratunga), ரனில் விக்கிரமசிங்கே (Ranil Wikramesinge) போன்றவர்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கு பெருமனது உடையவர்களாகவும், வெறுப்பரசியலில் நம்பாதவர்களும், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய முனைபவர்களாகவும் தான் தென்படுகிறார்கள். ஆனால் சிங்கள சமுதாயம் ஒரு நிலையற்ற (volatile),செயலிளந்த (dysfunctional) , வண்முறை எத்தருணத்திலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் சூழலில், சிங்களர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலை தர இயலாது. நம்பிக்கை தரக் கூடியது என்பது சட்டத்தின் அரசாட்சியை நிலை நாட்டுவதற்கான உள்ளார்ந்த வலிமை இலங்கை சமுதாயத்திற்கு இருப்பது.  துரதிட்டவசமாக இலங்கையின் வரலாற்றில் அந்த குணத்தை நம்மால் காண இயலவில்லை.

இறுதியாக என்னுடைய எண்ணம், சில வினாக்களுக்கு விடையே இல்லாதது போல், சில சமையங்களில் சமாதானமும், அமைதியும்  நம்முடைய முயற்சிகளால் சாத்தியமாகாது. இலங்கை விடுதலை அடையும் போது மக்களிடையே நல்லிணக்கமும் அமைதியும் நிலவும் என்பது காற்றில் எழுதப்பட்ட நம்பிக்கை தான். 

கேள்வி.: இனியும் இலங்கையின் வரலாற்றில் இனக் கலவரங்கள் தொடருமா ?

பதில்: என்னுடைய நம்பிக்கை உலகமயமாக்குதலும், தகவல் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் தேசிய அரசுகளுக்கும் மக்களிடையே இருந்த உறவின் இயல்பை முற்றிலும் மாற்றிவிட்டது. 20'ஆம் நுற்றாண்டில் தேசிய அரசுகள் பெற்றிருந்த  அந்தஸ்தையும், ஆக்கிரமித்திருந்த வலிமையையும் இச்சமூக மாற்றங்களினால் பெரிதளவும் இழந்துவிட்டன. அதனால் இனக் கலவரங்கள் பெரிதாக எழுவதற்கு சாத்தியம் இல்லை.  தமிழினி தன் புத்தகத்தில் எழுதும் ஒரு சம்பவம், கலவரங்கள் காலத்தின் மாற்றங்களால் தங்கள் முக்கியத்துவத்தை இழந்ததற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது. விதுஷா என்கிற பெண் தளபதி 1980களில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவள். 2007ஆம் ஆண்டு அவள் தமிழினியிடம் பேசும் போது விரக்தியாக சொல்கிறாள் "எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்பிடி ஒரு வாழ்க்கை ? உலகம் எங்கேயோ போயிட்டுது , நாங்கள் மட்டும் காட்டுக்குள்ளேயும் சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருக்கிறம்.". உலக மாற்றங்கள் தன்னுடைய  செயல்களை பயனற்றவை ஆக்குகிறது என்பதை விதுஷாவால் உணர முடிகிறது. 20'ம் நுற்றாண்டில் இடத்துக்காக பல இலட்சம் பேர் சண்டையிட்டு மாண்டனர் என்று கூறினால் அதனை புரிவதே 21'ம்  நுற்றாண்டு இளைஞனுக்கு கடினமானதாக இருக்கும். 

                                                    முடிவு






Friday, 10 June 2022

இலங்கைப் போர் - மூன்று பெண்களின் வாழ்க்கையும் எழுத்துகளும் - பாகம் 2

                             புத்தக ஆய்வு

             ஈழ விடுதலை போராட்டத்தில், சக விடுதலை இயக்கங்களில் செயல்பட்ட போராளிகளை, விடுதலை புலி இயக்கம் அழித்தது யாவரும் அறிந்ததே. ஆயுதம் ஏந்தாமல், அரசியல் அல்லது அறிவு தளத்தில் புலிகளின் கருத்துக்கு எதிர்ப்பு  தெரிவிப்பதையும், குறிப்பாக அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் பகுதியில் அனுமதிக்கவில்லை என்பதும் பொது அறிவு. அதற்காக அனேக அரசியல் கொலைகளை செய்ய அவர்கள் தயங்கவில்லை. 90'களில் விடுதலை புலிகளின் இயக்கத்திற்கு முரணான கருத்துகளை பொதுவெளியில் சொல்ல முடியாத நிலை தமிழ் மகானங்களில் நிலவியது. இந்த சூழ்நிலை உருவாவதற்கு முன்னால் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, ரஜனி திரனகாமாவின் படுகொலை. மனித உரிமைக்காக யாழ்பாண பல்கலை கழக ஆசிரியர்கள் (UTHR(J)) என்ற குழுவின் நான்கு பேர் கொண்ட நிறுவன உறுப்பினர்களில் ஒரே பெண் உறுப்பினர் ரஜனி திரனகாமா. யாழ்பாணத்தில் நடந்த வன்முறைகளையும், மனித உரிமை மீறல் சம்பவங்களையும், அரசியலையும் ஆவனப்படுத்துவதே குறிக்கோளாக வைத்து தொடங்கப்பட்ட குழு இது. ரஜனி தன் முப்பத்தைந்து வயதிலேயே மரித்ததால் தன்னைப் பற்றிய சுய சரிதையையோ, அதிக எழுத்துகளையோ விட்டுச் செல்லவில்லை. அவர்கள் எழுதிய ஒரே கட்டுரை எனக்கு தெரிந்த வரை "No more tears Sister". இது "முறிந்த பனை" என்ற ஆவணத் தொகுப்பில் ஒரு கட்டுரையாக வந்தது. அந்த கட்டுரை, இந்திய அமைதிப்படை, பெண்களுக்கு எதிராக செய்த அத்துமீறல்களை ஆவணப்படுத்தியதோடு, யாழ்ப்பாண சமூகத்தையும், பெண்களின் நிலமையையும் ஒரு மார்க்ஸிய நோக்கோடு கூர்ந்து ஆய்வு செய்கிறது. அதனை வாசிக்கும் எவருக்கும் ரஜனி பின்பற்றும் நிதானமான, அமைதியான எழுத்து நடை மனதில் பதிகிறது. அந்த கட்டுரையின் பின் ஒரு ஆழமான, விவேகமுள்ள மனதின் இயக்கத்தை நாம் காணலாம்.

            ரஜனி திரனகாமாவை பற்றிய பெரும்பாலான தகவல்கள் நமக்கு கிடைப்பது மற்றவர்களின் நினைவுகூர்தல்கள் வழியாகவே. அதில் மிக முக்கியமானது, 2005'ம் ஆண்டில் ரஜனி கொலையுண்டு பதினாறு வருடங்களுக்கு பின் வந்த "No more tears Sister" என்ற ஆவணப் படம். ரஜனியின் ஆளுமையையும், அரசியல் சார்ந்த பரிணாம வளர்ச்சியையும் நாம் புரிவதற்கு அவளுடைய பிண்ணனி பற்றி அறிவது மிகவும் முக்கியம். ரஜனியின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், யாழ்ப்பான சமுதாயத்தில, அவர்கள் சார்ந்த சாதியான வேளாளர்கள், பல நூற்றாண்டுகளாக ஆதிக்க நிலையில் இருந்தவர்கள். அதுவும் அறிவு தளத்தில் மேலோங்கி திகழ்ந்த ரஜனி போன்றோரின் குடும்பங்கள் தான் கலாச்சார, சமூக உயரடுக்காக (elite) இலங்கை தமிழர்களால் கருதப்பட்டனர். பொதுவாக இந்த மேலடுக்கு மக்கள், இலங்கையில் இனச்சண்டைகள் ஆரம்பித்த போது, அரசியலில் ஈடுபடாமல் அகதிகளாக மேலை நாடுகளுக்கு செல்லவே விரும்பினர். ரஜனியின் உதாரணம், இதற்கு ஒரு விதிவிலக்காகவே இருக்கிறது. அதுவே ரஜனியின் அரசியல் வாழ்க்கை மேல் நமக்கு ஒர் ஆர்வத்தினை ஏற்படுத்துகிறது.

            "No more tears Sister" என்ற ஆவணப் படத்தில், ரஜனியின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் இளவயதை பற்றி நினைவுகூருவதிலிருந்து ஒரு சித்திரத்தை நம்மால் தீட்ட முடிகிறது. ரஜனி தன் பள்ளி காலத்தில், கிருத்தவ வழிபாடு மற்றும் கிருத்தவ சபை பாடகக் குழு முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடுடன் எல்லோருடைய கண்களையும் கவரும் வெளிப்படை தன்மையுடன் கூடிய தைரியத்துடன் செயல்படுகிறார். ரஜனியின், இந்த குணமான வெளிப்படை தன்மையுடன் கூடிய தைரியத்தை, அவள் வாழ்க்கை முழுவதுமாக காணமுடிகிறது. இறுதியில் அவள் மரணத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. ரஜனியின் இந்த இயல்பான குணம் ஒரு பக்கம் நம்மை ஈர்க்க, இந்த கருத்துரையில் அவளுடைய அரசியல் பரிணாம வளர்ச்சியை பற்றி கவனம் செலுத்துகிறேன். ரஜனியுடன் மிக நெருக்கமாக இருந்த அவள் அக்காவான நிர்மலா கூறும் போது, கிருத்தவ போதனைகளின் தாக்கம் தங்கள் இளவயது கற்பனையை, சமூக நீதியும், ஈகைக்கும் கொண்டு சென்றது என குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இதே சமூக அக்கறை அவர்களை இடது சாரி அரசியலுக்கும் இழுத்து செல்கிறது. கல்லூரி நாட்களில், உலகளாவிய இடதுசாரி பிரச்சினைகள், புரட்சியவாதம், பெண்ணியவாதம் ஆகியவற்றில் மூழ்கின்றனர். பொதுவுடமை மேல் அவர்களுக்கு இருந்த ஈர்ப்பின் தீவிரத்தை அறிய , நிர்மலா அமேரிக்காவில் தன் படிப்பை முடித்து யாழ்ப்பானத்திற்கு வந்தவுடன், வகுப்புவாதம் இல்லாத பண்ணை ஆரம்பிப்பதற்காக நிலம் வாங்க முற்படுகிறாள். ரஜனி தன்னுடைய பாரம்பரிய குடும்பத்தில் ஒரு அதிர்வை உருவாக்கும் விதமாக, இனம், மதம், சமூக அந்தஸ்து எல்லாவற்றையும் கடந்து, தன் பெற்றோருக்கு அறவே விருப்பமில்லாத, சமூக அந்தஸ்தில் அவர்களுக்கு நிகரே இல்லாத, இடதுசாரி இயக்கத்தில் புரட்சியில் ஈடுபட்ட பெளத்த, சிங்கள இளைஞனை திருமணம் செய்கிறாள். இவ்வேளையில் தான் இலங்கையில் சிங்கள பேரினவாதம் தலையோங்குகிறது. நிர்மலா முதலிலும், பின்னர் மருத்துவ உதவி செய்வதற்காக ரஜனியும், விடுதலை புலி இயக்கத்தில் மெதுவாக இழுக்கப்படுகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இயக்கத்தில் இருக்கும் சர்வாதிகார போக்கு, மனித உரிமை மீரல்கள், போராட்டத்தை முற்றிலும் இராணுவ கண்ணோட்டத்தில் அணுகுவது போன்ற காரணங்களால் அவர்களால் அதில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. ரஜனியின் இந்த கால பகுதியின் செயல்களும், சிந்தனைகளும் தான், நாம் திரும்பிப் பார்க்கும் போது, நமது மனதில் அழுத்தமாய் பதிகிற ஒன்றாய் இருக்கிறது. இனச்சண்டை இக்காலகட்டத்தில் தீவிரமடைகிற சூழலில், நடுத்தரவர்க்க யாழ்பாண மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அலைமோதி செல்ல முற்படுகையில், முனைவர் பட்டத்தை இங்கிலாந்தில் முடித்திருந்த ரஜனி தன் இரு சிறு வயது மகள்களையும் அழைத்து யாழ்பாணத்திற்கு வருகிறாள். அவளுடைய இந்த செயலானது பொதுவான யாழ் சமூகத்தின் சிந்தனைக்கு நேர் எதிரானது. இதனை ஆட்சேபித்தவர்களுக்கு அவளுடைய விடை "பல்லாயிரம் பிள்ளைகள் குண்டு வெடிப்புகள் மத்தியில் வாழ்கின்றனர். என் பிள்ளைகளும் அவர்களில் ஒன்றாகவே வாழ்வார்கள்". யாழ்பாணத்தில் அவளுக்கு ஆபத்து என்று வேற்று இடத்திற்கு செல்ல அறிவுரை கூறியவர்களுக்கு, அவளுடைய மறுக்கும் பதில் "என் மக்களின் இந்த துயர மிக்க நாட்களில், அவர்களுடன் நான் வாழாவிட்டால் என்னுடைய ஆன்மாவுக்கும், என்னுடைய மக்களின் ஆன்மாவுக்கும் நான் ஒரு பொய்யை இழைப்பதாக இருக்கும்". "என்னுடைய மக்கள், என்னுடைய மக்களின் போராட்டம்", இந்த சொற்றொடரையே இந்நாட்களில் அவள் எல்லோருக்கும் முன் முகம் சுழிக்காமல், யாவருக்கும் பகிரங்கமாக அறிவிக்கிறாள். இந்த நாட்களில் தான், சீர்குலைந்து போன யாழ்பாண பல்கலை மருத்தவ துறைக்கு ஒரு புத்துணர்வை கொண்டு வருகிறாள். வேலையில் இவ்வாறு கருத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல் புரியும் இந்த காலகட்டத்தில் தான் யாழ்பாண பல்கலை கழகத்தில் ஆயுதமேந்திய குழுக்களின் ஊடுருவல் அதிகமாகிறது. இந்திய அமைதி படையின் ஆளுகையின் கீழ் யாழ்பாணம் இருந்த இந்த காலகட்டத்தில், அவள் பல்கலைகழக மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் இந்திய இராணுவத்திற்கும் இடையே வரும் சிக்கல்களுக்கு நேரடியாக இராணுவ மேலதிகாரிகளை அணுகுகிறாள். இந்திய ராணுவ அத்துமீறல்களை சுட்டிகாட்டும் போது ஒரு நெருக்கடி நிலமையை இந்திய அதிகாரிகளுக்கு அவள் உருவாக்கினாலும், நாளடைவில் அவளுடைய உரக்கமான, வெளிப்படை தன்மையுடன் கூடிய தைரியத்திற்கு, தானாகவே ஒரு மரியாதை ஏற்படுகிறது. ஆனால் மறையடக்கும் பாங்குள்ள (Secretive) அமைப்பாக செயல்படும் விடுதலை புலிகளுடனோ ஒரு அர்த்தமுள்ள ஈடுபாட்டை அவளால் ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை. இந்திய படைகளின் பிழைகளை தட்டி கேட்கும் அதே வேளையில், விடுதலை புலிகளின் அத்துமீறல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாள். இதில் உள்ள ஆபத்தை அவள் தெளிவாக உணர்கிறாள். தன் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தன் நண்பிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகையில் "ஒரு நாள் துப்பாக்கி ஒன்று என்னை மவுனமாக்கும். அதனை வைத்திருப்பவன் ஒரு புறத்தானாக இருக்கமாட்டான், இந்த சமூகத்தின் கருப்பையில் பிறந்த மகனாக இருப்பான் - அவனுடைய தாய் என் வரலாற்றை பகிர்ந்தவளாக இருப்பாள்". இவ்வளவு தெளிவாக தன் வாழ்க்கைக்கு இருக்கும் ஆபத்தை உணர்ந்தும், இரு மகள்களின் தாயாகிய ரஜனி, தினசரி வாழ்வை எப்படி ஒரு ஆரவாரமின்றி நடத்தினாள் என்பது நமக்கு வியப்பையே அளிக்கிறது. ரஐனி தன் சாவை மட்டும் முன்கணிப்பு செய்யவில்லை, அரசியலை குறித்த தெளிவும், இதயத்தில் உள்ள தார்மீக உணர்வும் அவளை ஓர் தீர்க்கதரிசியாகவே ஆக்கியது. பெரும்பாலான தமிழர்கள், விடுதலை புலிகளின் குரூர வன்முறை செயல்களை நியாயப்படுத்தியோ, அல்லது பல்வேறு காரணங்களை காட்டி, கண்டும் காணாதவர்களை போல் நடந்து கொள்ளும் தருணத்தில், ரஜனியின் அவதானிப்பு வரிகள் இன்றும் நம்மை வியப்புற செய்கிறது. "புலிகளின் வரலாறு, அவர்களுடைய கோட்பாடு வெற்றிடம், அரசியல் படைப்பாற்றல் இல்லாமை, சகிப்பின்மை, வெறி பிடித்த அர்பணிப்பு அவர்கள் உடைப்படுவதற்கு இறுதி காரணமாக அமையும். பழம்பெரும் புலிகள் தங்கள் அழிவிற்கு சொல்லும் தொன்மைக்கதைகளில், அவர்களின் பலியாள்களின் இரத்தமும், கண்ணீரும் பூசப்பட்டிருக்கும். ஒரு புதிய புலி அதன் சாம்பலில் இருந்து மீண்டெழுந்து வராது".

             ரஜனி, அரசியல் வண்முறைக்கும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக இருந்த அதே வேளையில், இந்த கருத்துரையில் எழுதப்படும் மற்ற இரு பெண்களின் வாழ்க்கை, விடுதலை புலிகளின் இயக்கத்தோடு பிண்ணி பிணைந்து இருந்துள்ளது. தமிழினியும், வெற்றிச்செல்வியும் விடுதலை புலிகள் இயக்கத்தில் 1990'களில், அதாவது ரஜனி கொலையுண்ட ஓரிரு வருடங்களில் சேர்ந்து, முல்லிவாய்க்காலின் இறுதி அழிவில் இலங்கை படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு மையயங்களில் சில காலம் தங்கி, அதன் பின்பு விடுவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில், உயர்ந்த பதவியாக கருதப்பட்ட அரசியல் பிரிவு தலைவியாக செயல்பட்ட தமிழினி, விடுதலை பெற்ற பின்பு தன் அனுபவங்களை "கூர்வாளின் நிழலில்" என்ற நூலில் வெளியிட்டார். அதன் வெளியீடு, இலங்கை சூழலை பின்பற்றியவர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. தமிழினி தன்னுடைய பூர்வீகத்தை, பற்றி எழுதும் போது, ஒரு மிகவும் சாமானியமான, தந்தையை இழந்த, சிறு விவசாயம் செய்யும் கூட்டு குடும்பமாகவே விவரிக்கிறார். நம்மை அறியாமலேயே நம் மனது ரஜனியையும், தமிழினியையும் ஒப்பீடு செய்கிறது. இருவரும் வேளாளர் சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக கலாச்சார உலகம் இரு துருவங்கள் போன்று அப்பாற்பட்டது. தமிழினியின் குடும்பம், ரஜனியை போன்ற நவீன, தனிக் குடும்பம் இல்லை. அவளுடைய குடும்பத்தில் பள்ளிக் கல்வியை முடித்தவர் என்று எவரும் இல்லை. ரஜனி, யாழ்பாணத்தில் வாழ்ந்தாலும், சிறு வயது முதல் அவளுடைய உலகம், உலகளாவிய நடுத்தர வர்க்கத்திற்கே பொது அடையாளங்களான மேற்கத்திய இலக்கியம், சிந்தனை, இசை, ஆங்கில பேச்சு போன்றவற்றில் வியாபித்து இருந்தது. தமிழினி தன் இளம் வயதின் இனிமையான தருணங்கள் என்று தன் சொந்த வார்த்தைகளில் கூறும் போது "ஜல்ஜல் எனச் சலங்கை ஒலியெழுப்பும் இரட்டை எருதுகள் பிணைக்கப்பட்ட மாட்டு வண்டியில் வைக்கோல் பரவி அதற்குமேல் பாய் விரித்து அமர்ந்து கொண்டு குடும்பமாக கரடிப்போக்குச் சந்தியில் இருந்த சினிமா தியேட்டர்களான ஈஸ்வரன் அல்லது பராசக்திக்குப் போய், அம்மம்மாவுக்குப் பிடித்த சிவாஜி அல்லது எம்,ஜி.ஆர் படங்களைப் பாதிவரை பார்த்து வருவது".

            வித்தியாசங்கள் ஒரு புறம் இருக்க, அவர்கள் மனப்பான்மையில் ஒரு முக்கிய ஒற்றுமை ஒன்றையும் காணமுடிகிறது. "கூர்வாளின் நிழலில்" புத்தகத்தின் முன்னுரையில், இப்புத்தகத்தை எழுதுவதற்கான காரணத்தை சொல்லுகையில் "எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில் தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்". இதனை வாசிக்கும் போது, ரஜனி உபயோகிக்கும் "என் மக்கள்" என்ற வாக்கியம் நம் ஜாபகத்திற்கு வருகிறது. விடுதலை புலி இயக்கத்தில் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்வது, தன்னுடைய சமூகத்திற்கு தான் செய்யும் கடமை என மட்டுமின்றி, வரும் இளம் தலைமுறையின் சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று உறுதியாக நம்பினாள். இப்படிப்பட்ட பொறுப்புணர்வு இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் காணலாம்.

         தனது பள்ளி பிராயத்தில் மேடைப் பேச்சு, கவிதை, பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்வுகளில் பங்குப்பெறும் தைரியமும், முனைப்பும் இருந்தாலும், கூடவே ஒரு கவனமும், எச்சரிக்கையையும் அவளிடத்தில் இருப்பதை புத்தகத்தை வாசிப்போருக்கு உணரமுடிகிறது. அவளுடைய இயல்பு என்று தன்னை பற்றி கூறும்போது, "உணர்ச்சியும், புத்தியும் குறிப்பிட்ட அளவு விகிதங்களில் கலந்ததாகவே முடிவுகள் இருக்கவேண்டும் எனக் கருதுவதுதான் என்னுடைய தனிப்பட்ட இயல்பு". தனக்குள்ள நிதர்சன போக்கையும், நிதானமான மனப்பான்மையையும் ஒருவித பெருமிதத்துடன் பார்த்த தமிழினிக்கு, தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் போது, எங்கே தவறு செய்தேன்,செய்தோம் என்ற கேள்வியே பூதகரமாக எழும்பி அவள் மனதை வாட்டுகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும் எவருக்கும், தமிழினியின் இந்த விடையே இல்லாத துயரமான அங்கலாயிப்பை உணர முடிகிறது. இந்த புத்தகத்தில் உள்ள மிகவும் மனதை உருக்கும் நிகழ்வு, தமிழினி சரணடைந்த பின் அவளை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வந்த இளம் சிங்கள மருத்துவருக்கும் அவளுக்கும் இடையே நடைபெறும் உரையாடல். இதனை என் வார்த்தைகளில் எழுதுவதை விட, இப்புத்தகத்தில் வரும் தமிழினியின் வார்த்தைகளிலே எழுதுகிறேன். "அந்த இளம் பெண் மருத்துவர் என்னிடம் கதைத்தார் "உயிர்களை கொல்லுறது பாவம். இந்த உலகம் எவ்வளவு அழகானது. நீ ஏன் இவ்வளவு நாளும் பயங்கரவாதியாக இருந்தாய். இனியெண்டாலும் உயிர்களை நேசித்து வாழப் பழகு" என்ற அவரது அறிவுரை எனது உள்ளத்தை மிகவும் பாதித்தது. நான் போராளியா? பயங்கரவாதியா?. என்னைப் போராளியக்கியதும் பயங்கரவாதியாக்கியதும் அடிப்படையில் எது என யோசித்தேன். அரசியல் தான். ஆயுதமே விடுதலையைப் பெற்றுத் தரும் என எமக்கு பாடம் புகட்டியதும் அரசியல் தான். ஆயுதமேந்தியதால் நீ ஒரு பயங்கரவாதி என முத்திரை குத்துவதும் அரசியல் தான். எனக்கும் இள வயதில் எத்தனை கனவுகள், கற்பனைகள், ஆசைகள் இருந்தன?. இன்னொரு உயிரை நேசிப்பவளாகவே சிறு வயதிலுருந்து நானும் வளர்க்கப்பட்டேன். எனது உயிரை கொடுத்து மக்களுடைய எதிர் காலத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தானே என்னை போராட்டத்தில் இணையச் செய்தது? அனால் விடுதலையின் பேரால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் உயிரிழப்புகளிக்கும் நானும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறேன். அதனை மறுப்பதோ மறைப்பதோ எனது மனச்சாட்சிக்கே நான் இழைக்கும் துரோகமாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்". தன் வாழ்க்கையில் எடுத்த தீர்வுகளை பற்றிய கேள்விகளைப் போலவே, தன்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் இரத்தமும், தசையையும், உயிரையையும் கொடுத்த விடுதலை இயக்கம், இறுதியில் முற்றும் பயனில்லாமல் போன சோகத்தை குறித்த கேள்விகளையும் அவளில் நாம் காணமுடிகிறது.

            தமிழினியின் புத்தகம் 380 பக்கங்கள் உள்ளமையால், அதில் உள்ள ஏராளமான நிகழ்வுகள், தகவல்கள், உபகதைகள் பற்றி இந்த சிற்றுரையில் எழுத சாத்தியமாகாவிட்டாலும், என் மனதில் கவர்ந்த சிலவற்றை குறிப்பிடுகிறேன். பெறும்பாலான போராளிகள் தமிழினியைப் போலவே பதின்ம வயதின் இறுதிகளில் (பொதுவாக 16,17,18 வயதில்) இயக்கத்தில் உள்வாங்கப்படுகின்றனர். இந்த யுவதிகளும், வாலிபர்களும் போராட்டத்திற்காக உட்பட்ட கஷ்டங்களையும், செய்த தியாகங்களையும் தமிழினி தன்னுடைய அனுபவத்தை சொல்லும் போது அதனுடன் யதார்த்தமாக அவைகளையும் சொல்கிறாள். பூநகரி இராணுவ தளத்தை கைப்பற்ற 1993'ல் நடந்த சமரில் தன் உயிர் நண்பியான சங்கவியை இழந்தது பற்றி இந்த புத்தகத்தில் வருவதை நான் எடுத்துகாட்டாக வைக்கிறேன். "என்னுடன் உயிருக்குயிராகப் பழகிய எனது நெருங்கிய நண்பிகளில் பலரை அந்தச் சமரில் எனது கண்ணெதிரிலேயே நான் இழந்து போனேன். அவர்களில் சாம்பவி எனக்கு மிக நெருக்கமான தோழி. மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும், சிறு வயதிலேயே அபாரமான சிந்தனைத் தெளிவும், திறமையும் கொண்டவள். வயல்வெளிக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் வெள்ளம் தேங்கிக்கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிரைக் குடித்து கொண்டிருந்தன. சிறிதாகக்கூடத் தலையை நிமிர்த்திப் பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்துகொண்டிருந்தோம். எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து திடீரென 'ஹக்' என வினோதமான சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க் கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. ஒரேயொரு ரவை சாம்பவியின் மார்பைத் துளைத்து வெளியேறாமல் அவளது இதயப் பகுதியில் தங்கியிருந்தது. குளிரத் தொடங்கியிருந்த அவளது உடலில் ஒட்டியிருந்த இறுதி உயிர்ச் சூட்டை எனது கைகளில் கடைசியாக உணர்ந்தேன். இந்தச் சமரில் தனக்கு மரணம் ஏற்படுமெனச் சாம்பவி கொஞ்சமேனும் நினைத்திருக்கவில்லை. "இந்தச் சண்டை முடிய உன்னுடன் வந்து வன்னியில் இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும். எமது அனுபவங்களைப் புத்தகமாக எழுதவேணும்." இப்படியான நிறையக் கனவுகளும் விருப்பங்களும் அவளிடம் இருந்தன".

             இதே சண்டையில், நம் கண்ணை கசிய வைக்கும் இன்னொரு போராளியின் கதை, தமிழினியின் சொல்லுதலில் நம் மனதின் திரையில், புத்தகத்தை வாசித்த பிறகும் நிற்கிறது. "அதே வயல்வெளியில் தலையில் சூடுபட்டு உயிரிழந்து போன இன்னொரு தோழி தாமரை. அதிகமாகப் பேசாமல் அமைதியாகவே இருந்து அனைவரையும் கவர்ந்துவிடும் அவளது கண்களில் இடையறாத சோகம் குடியிருப்பதாக எனக்குப் படுவதுண்டு. யுத்தம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு பூநகரியின் நாலாம்கட்டைப் பகுதியில் எமது அணிகள் இறுதியாகத் தங்கியிருந்த இரவு. இராணுவ முகாமின் பாரிய தேடொளி (focus) விளக்குகள் வழமைபோலச் சுழன்று சுழன்று அப்பிரதேசத்தையே பகலாக்கிக் கொண்டிருந்தன. பரா விளக்குகளும் உயரத்தில் எழுந்து பிரகாசித்துக்கொண்டிருந்தன. எமது சிறிய அணியில் ஒரு போராளி மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். 'உங்கள் ஆவி பிரிந்திடும் அக்கணப் பொழுதில் யாரை நினைத்தீரோ' என்ற வரிகளை கடந்து சென்றபோது எனது மனதில் அம்மாவுடைய முகம் வந்து போனது. எனது பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையிடம் கேட்டேன்; "நீ யாரை நினைப்பாய் தாமரை?" வழமையான அவளின் சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. "நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன்." அவள் சொன்ன பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவளுக்குள் ஆழப் புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக் காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்."              

            தமிழினியின் தங்கையின் வாழ்க்கை, தமிழீழ போராட்டத்திற்காக தமழினியின் குடும்பம் எவ்வளவு பெரிய விலையை கொடுத்தது என்பதற்கு உதாரணம். தமிழினி தன் தங்கையை பற்றி புத்தகத்தில் பெரிதுபடுத்தி எழுதாவிட்டாலும் அவ்வப்போது வரும் குறிப்புகளில் இருந்து, ஒரு நெகிழ்ச்சியான உறவையும், அதன் முடிவையும், நம் மனக்கண்களில் சோக ததும்பலுடன் உருவகிக்க முடிகிறது. இருவரும் பயிற்சி முகாமில் சந்திக்கும் வேளையே, அவளை முதன் முதலாக தமிழினி அறிமுகம் செய்கிறாள். தமிழினியை பின்பற்றி விடுதலை புலிகள் இயக்கத்தில் சேரும் அவள், மிகவும் உருக்கமாக தமிழினியை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கெஞ்சுகிறாள். "உனக்காகத் தான் நான் இயக்கத்தில் இருக்கிறேன் எனக் கூறி அழத் தொடங்குகிறாள்". அவளை பற்றி அடுத்த முறை தமிழினி குறிப்பிடுவது, தன்னுடைய பத்திரிகையாளர் கடமைக்காக களமுனை செய்திகளை திரட்டுவதற்காக செல்லும் போது அவளுடைய நண்பி ஓடிவந்து, கையை பிடித்து கூறுகிறாள், "தமிழினி எங்கட சந்தியா நேற்றிரவு கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நடந்த சண்டையில் தலையில் காயப்பட்டு உயிரிழந்திட்டாள்". தங்கையின் வாழ்க்கை பற்றிய சுருக்கிய குறிப்பை புத்தகத்தில் காணமுடிந்தது. அதனை அவ்வாறே இங்கு பகர்த்து உள்ளேன். "என் தங்கை நாகேஸ்வரி (கௌரி) சுப்பிரமணியம் 1975.07.09இல் பிறந்தவள். நான் படித்த அதே பாடசாலையில் படித்திருந்தாள். 1992இல் இயக்கத்தில் இணைந்து என்னுடன் ஒரே பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி எடுத்ததன் பின் சிறுத்தைப் படையணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தாள். அவளது சிவந்த மெல்லிய அழகிய தோற்றத்தைப் பார்த்தவர்கள், "இவ உன்ர தங்கச்சியா" என ஆச்சரியப்பட்டுக் கேட்பார்கள். குடும்பத்தினரில் அளவற்ற பாசமும் குறும்புக் குணங்களும் துணிச்சலும் நிரம்பியவள். அழகான கையெழுத்தில் கவிதைகள் எழுதுவாள், ஓவியங்கள் வரைவாள். 1997 காலப் பகுதியில் நானும் தங்கையும் ஒரே சமயத்தில் மூன்று நாள் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருந்தோம். சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் நாங்களிருவரும் அப்போதும் சண்டை போட்டுக்கொண்டோம். என்னைப் போல எந்த நேரமும் புத்தகத்துடன் பொழுது போக்காமல் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள் எல்லாம் செய்வாள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவாள். "நான் கெதியிலை, அப்பாவுடன் போயிடுவன். நீ அம்மாவைப் பாத்துக்கொள்" எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல இரண்டு குத்துக் கொடுத்துவிட்டுப் "பைத்தியம் மாதிரி அலட்டாதே" எனக் கடிந்துகொண்டேன்".

                தங்கையின் இறுதி நிகழ்வுகளுக்காக தமிழினி வீட்டிற்கு வந்திருக்கும் போது நடந்த கனத்த கணம், தமிழினியின் விவரிப்பில் இவ்வாறு "தங்கையின் இழப்பு குடும்பத்தவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தொடர்ந்துகொண்டிருந்த போரில் எனக்கும் ஏதாவது நேரிட்டு விடுமென அம்மா அதிகமாகப் பயந்தார். தங்கையின் இறுதி நிகழ்வுகள் முடிந்த கையோடு எனது முகாமுக்குச் செல்ல நான் புறப்பட்டபோது என்னைக் கட்டியணைத்தபடி, "இனிக்காணும் இயக்கத்திலிருந்து விலத்தி வந்துவிடம்மா" எனக் கதறியழுதார். என்னை நம்பி இயக்கத்தில் பல வேலைகள் தரப்பட்டிருந்தன. அத்துடன் எனது அன்புக்குரிய பல போராளிகள் உயிரிழந்து விட்டிருந்தனர். அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கான திராணி என் மனதிற்கு அக்கணத்தில் இருக்கவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்தபடி அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு நெஞ்சில் நிறைந்த சுமையோடு எனது முகாமைச் சென்றடைந்தேன்".

                தமிழினிக்கு தற்போது எழும் கேள்விகள் அவள் விடுதலை இயக்கத்தில் போராளியாக இருந்த போது ஒரு ஒத்திசைவான வடிவத்திற்கு வரவில்லை. தன் போராளி நாட்களை பற்றி கூறும் போது "இயக்கத்தில் எந்த வேலையைத் தந்தாலும் ஒரு உடுப்புப் பையைத் தூக்கிக்கொண்டு உடனே புறப்படத் தயாராக இருந்தனர் போராளிகள். நானும் அப்படியே செயற்பட்டேன். நின்று நிதானிக்காத காட்டாறுபோலக் காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இருந்த சரி, பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்திற்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. மேலும் களமுனையில் நாளாந்தம் எந்தக் கேள்விகளுமே கேட்காது எமது சக போராளிகள் தமது உயிரை இழந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தியாகங்களுக்கு முன்னால் வேறு எதனாலும் எழுந்து நிற்க முடியாதிருந்தது. 'வீரமரணம்' அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்கப் போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்பதைத் தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை".

                ஒரு ஒருங்கிய (coherent) வடிவமாக கேள்விகள் எழும்பவில்லை என்பதற்காக உணர்வு எழுச்சிகள் சில சந்தர்ப்பங்களில் அவளில் ஏற்படாமல் இல்லை. மாத்தையாவுடன் சேர்ந்து பிரபாகரனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், பொது மேடையில் அவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று தாங்கள் செய்த குற்றத்தை அறிக்கை செய்யும் போது தமிழினி தன் உணர்வுகளை கூறுகிறாள், "என்னை பொறுத்த அளவில் இலட்சியத்தால் ஒன்றிணைந்த உணர்வு ரீதியான குடும்பமாகவே இயக்கத்தைக் கருதியிருந்தேன். ஆனால் இப்படியான விடயங்களை அறிந்த போது மூச்சுக்கூட விடமுடியாத அளவுக்குப் பயமும் கலக்கமும் ஏற்பட்டது. என்னைப் போலவே பல போராளிகளும் உறைந்து போயிருந்ததை என்னால் உணர முடிந்தது. தமது உணர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ள முடியாத சில போராளிகள் இரகசியமாக அழுதுகொண்டிருந்தார்கள்".

                முல்லிவாய்க்காலின் அழிவுக்கு பின்னர், அவள் இந்த புத்தகத்தை எழுதும் போது, தன் உயிருக்கும் மேலாக கருதிய இயக்கத்தில் உள்ள பிழைகள் குறித்தும், அதன் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விமர்சனை செய்ய முடிகிறது. இயக்கத்தில் பிரபாகரனின் இடத்தை விளக்கும் போது, "பலரும் விடுதலை புலிகள் இயக்கம் தனிமனித வழிபாடுள்ள இயக்கம் எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான். இது எமது பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் கூடி வந்த விஷயமாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாகப் பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்குள்ளாகும்போதும் அவர் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் தான் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது".

                இறுதி யுத்தம் பற்றி எழுதும் போது, விடுதலை புலிகள் இயக்கத்தின் கோரமான உண்மையை பரிசீலிக்கிறாள். எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளது. அப்படியிருக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப் பட்டதிலும் எவ்வளவு அநீதி இருக்கிறது என்று அங்கலாய்க்கிறாள்.

                தமிழினி இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை பெற்ற ஒரு வருடத்திற்குள், புற்று நோயால் மரணமடைந்தாள். தன்னுடைய சாவிற்கு முன்னால் தன் மனதில் உள்ளவைகளை எழுதிவிட வேண்டும் என்ற நோக்குடன் வேகமாக எழுதப்பட்ட சுயசரிதை இது. விரக்தியும் சலிப்பும் மிகுந்த தன் வாழ்க்கை பயணத்தில் இருந்து ஏதாவது ஒரு நன்மையான பாடம் தன் சமூக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இப்புத்தகத்தின் பக்கங்களில் இருந்து மிளிர்கிறது. இந்த விருப்பம் வாசகர்களாகிய நம்மிடமும் பரவி, நம்மையும் சிந்தனை செய்ய வைக்கிறது. புத்தக ஆய்வுக்கும் மேலாக, தனிப்பட்ட முறையிலும் இந்த புத்தகத்தை வாசிப்பது என் இதய சரங்களை இழுப்பதாக இருந்தது. அதற்கு ஒரு காரணம் இந்த புத்தகத்தில் வரும் தமிழ் மக்கள் சமூகத்திற்கும், வங்க கடலால் பிரிக்கப்பட்ட நமக்கும் உள்ள பல ஒற்றுமைகளால் வருவது. இன்னும் மிக பெரிய காரணம், இதில் வரும் பல போராளிகள் என்னுடைய தலைமுறையை சாரந்தவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை பிரயாணமோ, நாம் யோசிக்கக் கூட முடியாத கொடுமையான வண்முறை சூழலிலும், பயங்கரமான தீர்வுகளை எடுக்கும் நிலைகளிலும் பயணிக்கிறது. நான் பிறந்த அதே வருடத்தில், அதே மாதத்தில சில நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவள் முன்னர் நான் குறிப்பிட்ட தமிழினியின் தங்கையான சந்தியா. 1992'ம் வருடம் நான் பள்ளி படிப்பை முடித்து உலகத்தை குறித்த எதிர்பார்ப்போடு கல்லூரிக்குள் காலை எடுத்து வைக்கும் அதே நேரத்தில் அவள் வாழ்க்கைக்கு உத்தரவாதமே இல்லாத அயுதமேந்திய போராட்டத்தில் சேருகிறாள். நான் 1998 இல், என் முதல் வேலையில் அடியெடுத்து வைக்கும் தருணத்தின், ஒரு மாதத்திற்கு முன்பு, அவள் போரில் மரணத்தை சந்திக்கிறாள்.

தமிழினி இறுதி அறிவுரையாக தன் புத்தகத்தில் சொல்லி முடிப்பது ஒரு ஆசை கலந்த நம்பிக்கையின் பிரகடனமே. இனிவரும் தலைமுறை நாங்கள் அடைந்த இன்னல்களை அடையக் கூடாது. அதற்கு அமைதியான அரசியலே நாம் பின்பற்ற வேண்டிய வழி. ஆனால் அது உணர்வு ரீதியாக தீர்வாக பட்டாலும் எவ்வளவு தூரம் நிதர்சனத்தில் அது சாத்தியமாக அமையும் என்பது கேள்விக்குறியாகவே இப்புத்தகத்தில் தொங்குகிறது.

கடைசியாக நாம் பார்க்கும் எழுத்தாளர், பல சிறு கதைகள், மற்றும் தன் அனுபவங்களை சுய சரிதையாக எழுதிய வெற்றிச்செல்வி. ஈழ விடுதலை போரில் தன் கையையும் ஒரு கண்ணையும் இழந்த வெற்றிச்செல்வியின் எழுத்துகளில் , இவ்வளவு தியாகங்கள் செய்தும் தோல்வி அடைந்தோம் என்பதை தவிர வேறு வருத்தமோ கேள்விகளோ தென்படுவதில்லை. ஈழ விடுதலைக்காக போராடிய புலிகள் இயக்கத்தின் மேலும், தன் சக போராளிகள் மீதும் அவளுக்கு இருக்கும் பெரும் மதிப்பும், மரியாதையும் அவளுடைய எழுத்துகளில் மிளிர்வதை நாம் காணலாம். அவர்களின் வீர அர்ப்பணிப்பு மிகுந்த வரலாற்றை பாதுகாக்கவேண்டும் என்ற உந்துதல் தான் அவளின் எழுத்துகளின் காரணம் என்று சொல்கிறாள். அதே வேளையில் ஒரு ஒரு நேர்மறையான அணுகுமுறையும், ஒரு துணிவையும் அவள் செயல்களில் காணமுடிகிறது. இலங்கை இராணுவத்தினர், சரணடைந்த போராளிகளை பதிவு செய்யும் போது, புலிகளின் அமைப்பில் தான் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்த தகவலை அவள் மறைக்கவில்லை. அதனால் அவளுக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தாலும், அதனை மாற்றி சொல்வது தன் கடந்த காலத்திற்கும், தான் அங்கமாக இருந்த இயக்கத்திற்கும் செய்யும் துரோகம் என்றே கருதுகிறாள். பம்பைமேடு புணர் வாழ்வு மையத்தின் கடினமான சூழ்நிலையிலும் தோய்ந்து போகாமல், நாடகம், இலக்கியம் என்று தன்னையும் மற்றவர்களையும் ஈடுபடுத்தி அந்த குரூர அனுபவத்திலும் ஒரு நேர்மறையை உருவாக்குகிறாள். கலைகளால் தான் மனித சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர உணர்வை வளர்க்க இயலும் என்பது அவளது நம்பிக்கை. புணர் வாழ்வு மையத்தில் நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று சிங்களர்களிடமும் சுமூகமான உறவை ஏற்படுத்த முயலுகிறாள். அவளிடம் இல்லை தனி மனித கோபங்களும், வெறுப்புகளும். அவள் எழுதியதில் நான் படித்தது "ஆறிப்போன காயங்களின் வலி" என்று பம்பைமேடு தடுப்பு முகாமில் தான் சந்தித்த அனுபவங்களை பற்றிய சரிதையும், தன் சக விடுதலை வீரர்களின் வாழ்க்கையை தொகுப்பாக வழங்கும் "குப்பி" என்ற இரு நூல்கள். இப்புத்தகங்கள் பின்பற்றுவது ஒரு எழிய நடை. பொதுவாக இப்போது இலக்கிய மேண்மை என்று கருதப்படுவது, தன்னுடைய சிந்தை, வாழ்க்கையை நுண்ணறிவுடன் திரனாயும் செயல்திரனும், அழகான வருணனையுடன் கதை எழுதும் ஆற்றலையும் சொல்லலாம். வெற்றிச்செல்வியின் நூல்கள் இதற்கு விதி விலக்காகவே உள்ளது. அவளுடைய புத்தகங்கள் உண்மைகளை எழிமையாக, அலங்கரிப்பு ஏதும் இல்லாமல் சொல்லும் தண்மையை கொண்டவை. முன்னர் குறிப்பிட்டதைப் போல் புலிகளின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை ஆவணப் படுத்துவதாகவே அவள் எழுத்துகள் இருக்கின்றது. இதில் அவள் இனம், குழு போன்ற உணர்வுகளை தாண்டி ஒரு எழுத்தாளரின் மேலான கடமையான, உண்மைக்கு சாட்சியாக இருத்தல் ( being witness to the truth) என்பதில் தவறுகிறாளோ என்ற ஐயம் வருகிறது. உதாரணத்திற்கு அவள் விடுதலைப் புலி இயக்கத்திற்குள் கேள்வி கேட்கும் உரிமை இருந்தது என்று குறிப்பிடுகிறாள். அதற்கு உதாரணமாக சொல்லுவது பெண் போராளிகள் பிரபாகரனை கலாயிப்பது, (முக்கியத்துவம் இல்லாத) கேள்விகளை கேட்பது போன்றவை. இயக்கத்தின் பன்முகத் தன்மையான அணுகுமுறைக்கு அவை சான்றல்ல என்பது காரியங்களை கூர்மையைாக பார்க்கும் தமிழினிக்கு தெரிகிறது. வெற்றிச்செல்வியின் இயக்கப் பற்று அவள் கண்களை அதற்கு மறைக்கிறது. இதுவே அவள் பலவீனமாக இருக்கிறது.



.


            


                

 

            

            


Tuesday, 26 April 2022

இலங்கைப் போர் - மூன்று பெண்களின் வாழ்க்கையும் எழுத்துகளும் - பாகம் 1

முன்னுரை

                தமிழ்நாட்டில் 1970,80 களில் பிறந்து வளர்ந்த பலருக்கு, இலங்கையில் தொடர்ந்து நடந்த வன்முறை, நமது பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே  இருந்தது.  இலங்கையில் நடந்த வன்முறையின் பிரதிபலிப்பு, தமிழ் நாளிதல்கள்,  அரசியல் தலைவர்களின் மேடைப்பேச்சுகள், சுவரொட்டிகள் மூலம் தமிழ் நாட்டு மக்களிடம் தொடர்ந்த ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியது. இலங்கை மோதல்கள் பற்றி பெரிதளவு நான் படித்த பள்ளியிலோ, பொது இடங்களிலோ பேசப்படாவிட்டாலும், தமிழ் நாளிதல்களில் வரும் தமிழ் விடுதலை இயக்கங்களின் வெற்றிகளும், சிங்கள படைகளின் தோல்விகளும் ஒருவித குதுகலத்தை பலர் மனதில் ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. 

                ஆனால் நாம் இலங்கை கலவரத்தை பற்றி அறிந்தது ஒரு எளிமையான, நேர் கதையே. அதனை சுருக்க சொல்லுவோமானால், சிங்கள பெரும்பான்மை இனவாத வெறியின் தாக்குதலுக்கு சிறுபாண்மை தமிழர்கள் ஆளானார்கள். இதற்கு சாட்சி தான் அந்நாட்களில் செய்திதாள்களில் வந்த மனதை கலங்க வைக்கும்  கோர புகைபடங்கள். விடுதலை புலிகள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழர்கள் யாவரும் பெருமிதம் அடையும் வகையில் தைரியமும், வீரத்துடன் போரிட்டு, தமிழ் மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி ஒரு  தலைநிமிர்வையும் அளித்தார்கள்.  

                நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுலை புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலால் பலியாகும்  மட்டும், மேலே விவரிக்கப்பட்ட இந்த ஒற்றை பரிமாண நோக்கே தமிழகத்தில் தலைதூக்கி இருந்தது. அது மட்டுமல்லாது, முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் தமிழீழ வேட்கை  அணையும் வரை, இலங்கையில் நடந்த நிகழ்வுகள், மோதல்கள், சமூக நிலமை பற்றி, ஒரு ஆழமான புரிதலை ஏற்படுத்தும் எழுத்துகள், தமிழக பொதுத்தளத்தில் பேசப்படும்படியாக எழவில்லை. நான் அறிந்ததில் இதற்கு ஒரே விதிவிலக்கு, "முறிந்த பனை" என்று UTHR-J( University Teachers for Human Rights-Jaffna)  கொண்டு வந்த அறிக்கைகளின் தொகுப்பு மட்டுமே. அனால் இது பொதுத் தளத்தில் பிரபலம் அடையவில்லை.

            அனால் கடந்த பத்தாண்டுகளில் நிலமை மாறியுள்ளது. பல புத்தகங்கள் இலங்கையின் அண்மை கால நிகழ்வுகளும், சூழலும் பற்றிய விஸ்தார விவரிப்பை அளிக்கும் விதமாக வந்துள்ளது. நான் இந்த மறு ஆய்வை மூன்று பெண்களின் வாழ்க்கை,  அவர்கள் எழதிய கட்டுரைகள், சுயசரிதைகளை அடிப்படையாக வைத்து எழுத முற்படுகிறேன். இந்த மூன்று பெண்களும் தமிழர்கள் என்ற அடையாளத்திற்கும் மேலாக , தனித்துவம் வாய்ந்தவர்களாக, வேறுபட்ட அரசியல் அனுகுமுறைகளை கொண்டவர்களாக இருந்துள்ளனர். இவர்களுடைய வாழ்வையும், அனுபவங்களையும் வாசிக்கும் போது, கூடவே அவர்கள் வாழந்த சமுதாயத்தின் அரசியலை பற்றிய புரிதலும் நமக்கு  வெளியாகிறது.

            முதல் பெண்மனி, உலகளவில் இலங்கை பிரச்சனை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்த பெயரான ரஜனி திரனகாமா. புலிகள்  இயக்கத்தில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னர் விடுதலை புலிகளால் கொல்லப்படுகிறார். அடுத்த எழுத்தாளர், விடுதலை புலி இயக்கத்தின் பெண் போராளிகளின் அரசியல் அணி தலைவராக இருந்த தமிழினி. புலிகள் இயக்கத்தில் முக்கிய பொருப்பிலிருந்தமையால், இவர் எழுதிய "கூர் வாழின் நிழலில்" என்ற புத்தகம் இலங்கை தமிழர் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கடைசியாக தேர்ந்தெடுத்த எழுத்தாளர் வெற்றிச்செல்வி. விடுதலைப் புலி இயக்கத்தில் பதினெட்டு வருடங்களாக செயல்பட்டு, விடுதலை புலிகளின் தோல்விக்கு பின் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட புனர் வாழ்வு மையத்தில் தங்கி பின் விடுதலையானார்.  தன் புனர் வாழ்வு மைய அனுபவத்தை "ஆறிப்போன காயங்களின் வலி" என்ற தலைப்பிலும்,  ஏழுக்கும் மேற்பட்ட பிற நாவல்களையும் எழுதியுள்ளார். 

            இலங்கை சமூக சூழலும், அங்கு நடைபெற்ற போராட்டங்களையும் பற்றி மேலும் அறியவும், இந்த மதிப்புரையை எழுதுவதற்காகவும், வேறு சில ஆவணங்கள், எழுத்துகளையும்  வாசித்தேன். அவற்றில் முக்கியமானவை கனேசன் ஐயர் எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்". Ben Bavinck என்ற Dutch பாதிரியாரின் நாட்குறிப்பு, ஒரு மனிதநேயமிக்க வெளி சமூகத்து மனிதன், இலங்கை போராட்டத்தை எப்படி உள்ளுணர்ந்தார் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. கடைசியாக "முறிந்த பனை"  அறிக்கையின் அவதானிப்புகளும், அதில் எழுப்பியிருந்த கேள்விகளும் இந்த ஆய்விற்கு உதவியது.

Labels:

Thursday, 24 March 2022

Anti-Christian Violence in India - Books by Chad Bauman

Chad Bauman is an American scholar who has written books on contemporary Christianity in India. Some of his books are  Christian Identity and Dalit Religion in Hindu India 1868 1947The Routledge Handbook of Hindu-Christian Relations, Constructing Indian Christianities: Culture, Conversion and Caste.  While the state of present day Indian Christianity and Indian Christians is an interesting topic in itself and would need a separate write-up, this review is of two books that Bauman has written on Anti-Christian violence in India. These two books are Pentecostals, Proselytization, and Anti-Christian Violence in Contemporary India and Anti-Christian Violence in India. Many of the themes and thoughts of Chad Bauman overlap in these two books, which made me think, that it would be fit to write a single review. Another important reason for writing this review, is that in this current period of increasing Hindu aggressiveness and rampant misinformation, a seriously researched book is an invaluable help for giving right thinking people an understanding of issues which is for most people "far-off".

          Since Anti-Christian violence in India is for the most part, targeted against "Pentecostals" and "Pentecostalized Evangelicals", it is on this subgroup of Christianity that he focuses on in this book. Before delving into the specifics, he provides a brief overview of the origins and history of Pentecostalism in India. For readers who are interested in knowing more about the history of the Pentecostal movement in India, much of the information in this chapter is taken from "The South Indian Pentecostal Movement in the Twentieth Century" by  Michael Bergunder. For a lay reader like me, who thought that the modern Pentecostal movement started with the Azusa Street revival in Los Angeles of the early 20th century, it was revealing to know that there are documented early Indian revival meetings having displays of Pentecostal experience in 1860. Also interesting to know was the role played by Pandita Ramabai and her Mukti Mission in the global spread of Pentecostalism.

    It is also in the first chapter, that he tries to distinguish Pentecostalism and delineate it from both Mainstream Protestant and Catholic denominationalism, as well as the more problematic 'Evangelical' Christianity in the Indian context. For many of us who have witnessed Pentecostal worship, it is characterized by boisterous loudness and  shared affectivity in the congregation. Many Pentecostal services also feature "glossolalia" and speakers making "Prophecies". In simple terms, there is a lot of importance given to the "Holy Spirit" and its manifestation, as part of congregational worship. Putting it in layman's term, you would be able to name it when you see it. In the Indian context according to Baumann, even evangelical groups that are involved in missionary work too display many characteristics that are seen in Pentecostal worship. Baumann calls these groups "Pentecostalized  Evangelicals". For a book exploring Anti-Christian violence in India, elaborate exposition on the nature of Pentecostalism by using Durkheimian or (William) Jamesian line of enquiry is simply too trite. These theoretical and theological meanderings occupy too many pages of the book without really advancing any line of thought towards the purpose of the book, which is to show a light on Pentecostalism and Anti-Christian violence. I had a strong feeling that these elaborations were included to make the book look more academic. While these belaboring's distract, the book does move forward by asking interesting questions. One interesting question is, why does evangelical Christianity in India become Pentecostalized. Baumann gives two answers to this question. Pentecostal forms of worship and preaching have become so widespread through mass media (TV shows and musical CDs), that they have attained a sort of normality of worship style in evangelical Christian circles. The second reason is the Indian milieu that encourages ecstatic worship and religious activities like healing and divination. Evangelical activity becomes Pentecostalized because congregations demand spirit-filled worship and healing. So while Baumann is not able to clearly get any clear delineating boundary between Evangelicals and Pentecostals in worship or doctrine, I thought at least in the South Indian context I could spot a difference in terms of their relationship with other Christians. In South India, my casual observation has been, that there is a subtle hostility and not much personal relationship (at least at the leadership level) between ideological Pentecostal churches and mainstream Protestant churches. But this is not so with evangelical churches. Many of the indigenous evangelical mission organizations are sponsored by members of mainstream Protestant denominations,and while their churches in the mission fields may have a predominantly Pentecostal form of worship, the missionaries and leaders continue to maintain a relationship with the institutional church. There is continuous shared use of resources and people happening in informal ways. This may not be true in North India, where Baumann mentions the proportion of Christians is too small, that denominational walls are fluid, and cross-overs continuously happen.

    The second chapter discusses how, during British rule, a Hindu identity grew in opposition to what it saw as "foreign" Muslim and Christian identities. But first, he discusses the overall peaceful coexistence that has existed for a 1000 years between Christians and Hindus in Kerala. A mention of Syrian Christians is an often compulsory topic in any discussion on Indian Christianity. This book too is no exception and it takes its references from "Christianity in India: From Beginnings to the Present" by Michael Frykenberg. Syrian Christians before the advent of the Europeans were considered a ritually pure and "high ranking" community of warriors and traders. As was common in medieval South India, achieving ritual high status needed participation in the temple "honors" system and the privilege to be able to give sacrificial gifts to deities. To be so highly integrated into the existing Hindu socio-religious cultural system, makes the very claim of Syrian Christian "Christianness" highly suspect. Understanding this makes the whole claim of the ancientness of Christianity in the Sub-Continent, which both Baumann and Frykenberg make in their books contentious. While this is a digression from the main topic of anti-Christian violence, the history of Syrian Christians reveals certain motivations that drive anti-Christian violence, a theme which I will discuss later. The remainder of the second chapter examines the period from the mid-nineteenth century to the present post-independence age, during which a Hindu identity antagonistic to the west and, by extension, its religion grew. For students of history, the events and narratives mentioned here are familiar and have been covered exhaustively by very many works of scholarship. I summarize them in the rest of this paragraph. Some of these significant events include the arrival of more missionaries in 1813 after the East India Company granted them permission to work in India, the social and religious reforms (such as the abolition of Sati) that they helped to bring about, and their advocacy for policy changes that favored lower castes, peasants, and Christians. Many attacks on native converted Christians occurred during the Great Rebellion of 1857, which historians now believe was sparked by perceived British intrusions into the religious and social lives of Indian elites. The association between Christians and British rule was being made by the early and mid-nineteenth century at least in the formerly Muslim ruled North India. The later part of the nineteenth century saw the decennial census and Swami Dayanand Saraswathy's "Shuddi" movement. The 20th century saw Gandhi equating conversion to "denationalization" and normalizing anti-conversion discourse with his famous words "If I had power and could legislate, I should certainly stop all Proselytizing ..". While the post-independence era of Nehruvian nation building saw a temporary truce in public expressions of Anti-Christian conversion sentiments, an ambivalence on Christian conversions has always continued to exist amongst the opinion making middle classes ( read upper castes). This has been especially buttressed by the Niyogi report on conversions in Madhya Pradesh which blamed "force, fraud, and allurements". The post-liberalization era saw a significant increase in Anti-Christian violence with major riots in Dangs and Kandhamal. It is also in this period that violence against Christians became "routinized" in the sense that it has become so "everyday", that it no longer warrants the mainstream attention.

    The third chapter talks about the reason for the disproportionate targeting of Pentecostals. Baumann lists three inherent reasons in the nature of Pentecostalism that could cause violence against it. They are its (1) evangelical assertion and enthusiasm,(2) the greater presence and participation, within it, of marginalized and vulnerable peoples, and (3) its countercultural posture. This is the chapter that reveals the serious shortcomings of this book. The author seems to be so interested in developing theoretical frameworks and getting into the "nature" of things that he misses the serious casework needed to get a more definitive understanding. The only statement in this whole chapter that seemed fully empirical was a commonsensical one by John Dayal (Leader of the Ecumenical Christian Council), on the reason for Pentecostal churches being targeted, “The episcopal, mainline churches have withdrawn from the countryside. . . . They’re not there to be victimized. . . . You can’t drown on a mountaintop.”. As a reviewer attempting to fill this missing gap, I would like to add in this review, a localized Hindu-Christian conflict that I have had first-hand experience of, and which incidentally happened to be the first instance of Hindu-Christian violence in Post Independence India. This was the fatal Hindu-Christian riots of Mandaikadu in Kanyakumari district of Tamilnadu.Despite the fact that I did not conduct extensive research on this, I was able to form a causal narrative of the conflict based on incidents mentioned in casual conversations and distinct recollections of different people. And from what I gathered, Pentecostal Christians were very peripheral to the conflict, despite the fact that the Pentecostal movement was very vibrant in the district. The seeds of the fissures that would later blow up into a large scale riot and lead to an eventual Hindu political consolidation, started off as a power struggle in the political arena between emergent lower caste Nadar leaders in the secular Congress party. Hindu Nadar leaders felt that the Christian Nadar leaders used religion as a tool to marginalize and discriminate against them within the party. The general recollection among many people(both Christian and Hindu) is that Nadar Christians or at least a section among them, behaved in a very discriminating, snobbish, "looking down" sort of manner toward their Hindu brethren. This parochialism was fearfully amplified by the institutional power (Education, Medical and Political) that mainstream Christians held in Kanyakumari district. To what extent, Christianity can be implicated for this discriminating attitude is debatable. In the highly casteist, low-trust societies (my own subjective experience growing up there) of Travancore and Tamilnadu, this sort of snobbery and "looking down" is very normative and not "out of the ordinary". But what should have remained a vexing localised disagreement grew into something larger and more terrifying as a result of its ability to appropriate as its own narrative, tropes developed as part of the national "Hindu" identity somewhere else. Some of these ideas, as Bauman writes in the previously discussed second chapter, include conflating India with a "Hindu" identity, imagining Christianity and Islam as aggressive foreign entities that prey on a tolerant and vulnerable Hindu people, and so on. In addition to the above was the role played by organizations of the Sangh Pariwar, who in the words of Paul Brass, "there are active, knowing subjects and organizations at work engaged in a continuous tending of the fires of communal divisions and animosities ...". At least in Kanyakumari district then, Hindu-Christian conflict developed synchronously and in relationship to mainstream Catholic and Protestant denominations. Are Pentecostals then totally absent in this Hindu-Christian conflict?. In present-day Kanyakumari district, as in many other places, there has been a phenomenal growth of autonomous Pentecostal churches. While Christians were a significant minority, both at the time of independence and Mandaikadu riots(1982), they are a majority (est. 62%)now, thanks to this explosive growth of Pentecostal Churches. But this growth has not seen any large scale riots or violence("Routinized" violence, mostly verbal aggression against Pentecostals though is not uncommon. But these are mostly opportunistic crimes because Pentecostals do not hit back nor do they mostly complain to the police). While the main reason for this, is the ruling Dravidian parties' strong anti-communal leanings, Could there be other factors that miss our eye?. It is in questions like this, without any definitive answers and where facts are not easily forthcoming, that we have to turn into speculation about the "nature" of things and phenomena. My supposition would start from the argument, that in KanyaKumari district which has seen a historical Hindu political consolidation and where politically powerful and well connected organizations like "Hindu Munnani" have a widespread grassroots presence, it would have been virtually impossible for the mainstream denominations (Catholic and Protestant) to have grown as much, without a major violent blowback. This brings us to an intriguing corollary: how did the Pentecostal movement manage to do just that?. I for one, believe the answer to this lies in the very nature of Pentecostal religion. I would like to quote Bauman on this, "the Pentecostal emphasis on freedom in the spirit, and freedom to follow the spirit where it leads, creates a scenario in which Pentecostalism is always in a state of becoming, always emergent and yet-to-be-determined. Every Pentecostal generation is, as Everett Wilson points out, “the first generation.”". It is this nebulous nature of the Pentecostal movement, its inability to stand still and create something solid that bamboozles organized Hindu groups. The language of "Hindu" identity and aggression developed in cultures and places "far off" is superfluous when face to face with Pentecostal Christianity. 

    The fourth chapter is on what Bauman names as "recuperative conversions". These are conversions initiated by faith healing. According to Bauman, most conversions, or at least potential converts contact with Pentecostalized Evangelicals start with a request or a need for healing. In the words of one Pentecostal Pastor,"70% of the converts are converted because of physical or spiritual healing. The other 30% also get healed of something". What Bauman mentions here can be attested by anyone who is in touch with missionaries or mission organizations. Another interesting fact that Bauman mentions is not all faith-healings result in conversion. This is because, in the Indian context, people are always shopping for relief from physical and spiritual ailments. They could be visiting shrines, godmen, and magic practitioners one after another. Miraculous healing does not immediately result in change of religious identity or long-term association with the Prayer Group or Pastor. Typically according to Bauman, caste is one of the factors that plays a role here, with higher castes avoiding conversion because of the association Christianity has with lower castes. It is also in this chapter that Bauman contradicts the widely prevalent opinion that "force, fraud  and allurement" are behind Christian conversions, a view that was popularized by Gandhi and later the Niyogi report. According to the voluminous Niyogi report, Christian missionaries use the power and prestige of modern medicine for fraudulent conversion. The logic of faith healing is in direct contrast to the spirit of Western medicine, nor does it need its financial resources. Another observation that can be added, is that in current-day India, modern hospitals and medicines in rural India are no longer the preserves of Christians, unlike at the time of the "Niyogi report". 

    The fifth chapter is about mission organizations and their work. He debunks the popular notion believed by many people, that Christian missionaries are foreign missionaries. Most missionaries now are Indians. The book's general weakness of meandering, without getting to the point is visible here too. Take the topic of foreign funding for evangelical work. There is much information, on how much Americans contribute, the method and denominations that they contribute to, research on different manuals and magazines to find how much they contribute, strategies that foreign missions follow and so on, that it misses the essential question, which is, how important is foreign money to "effective" evangelical activity in India. The answer to this question is critical because it is widely assumed that foreign money drives Indian evangelical activity. To substantiate this assumption, would need a lot of fieldwork, which is unfortunately lacking. Since that is missing here, I would add my own experience of what I personally witnessed. A mainstream non-charismatic denomination called "Churches of Christ" as part of its evangelical mission started its outreach in Bangalore. In the 10 year period (from 1985 to 1995) that I witnessed its operation as an outside observer, I saw American missionaries being sent to Bangalore for extended periods of time, visiting groups of American missionaries holding gospel preaching meets in large costly auditoriums, children's retreats organized, a head office in Bangalore's CBD being taken on rent for worship service. Like any other rich American organization looking to expand in India, it attracted hanger-on's who offered their services for monetary help. It also attracted peripheral Christians who were drawn in by the novelty of the whole enterprise and, most likely, the opportunity to associate with American glamour. After spending millions of dollars through the years, it could not attract more than a handful of people, and that too a transient one. My experience from both hearsay and direct experience is, that there has to be a dedicated and strong local agency for a missionary organization to be successful. Some of the very successful evangelical organizations are indigenous for this very reason. The missionaries of these organizations at great personal cost(many of them leave secular jobs) work in remote areas(mostly tribal) separated from their children (who study in Dohnavur). Prayer leaders in missionary support areas (mostly South India) organize financial support for these missionaries and hold regular prayer meetings. Many families also sponsor missionaries, visiting them in their mission fields. If at all there is a Western influence in these evangelical missions, it is the example of early pioneering Christian missionaries like William Carey, Hudson, and Stanley, on whom they model their evangelical life. Bauman cites the example of overseas missionary support organizations like Spiritual Overseers Service International that speak in modern business terminology of "insuring a superior return for missionary investment". These organizations by their very nature attract "career-oriented" personality types and their resulting work is ephemeral too. Even though there might be a lot of American money flowing into evangelical networks, their effectiveness in proselytization is highly doubtful (cross-checked with missionaries in the field, many of whom expressed disdain).  Support for social services such as running children's homes, feeding poor children, building hospitals, providing medical services, and a plethora of other forms of social work is where American money is more effective. These have clearly defined metrics to evaluate and can be done in a cross-cultural environment. Other than these evangelical organizations, the explosive growth of Pentecostal Christianity is driven by people like Prakash and Satish whom Bauman cites (a welcome instance of fieldwork in the book),  as having received some miraculous healing, which they interpret as God's calling, and take up full-time ministry to plant house churches. These types of Pentecostal house churches are financially self-sufficient since their members offer tithe. In fact, as I write this review, ten years from the time of publication of this book, stringent FCRA regulations have ensured a severe curtailment of financial support from abroad for evangelical activities. This though has meant no signs of slowdown for Pentecostalized Evangelical activity. 

    The last and concluding chapter moralizes on Conversions, the naturalness of Anti-Christian violence, and argues on the question of culpability. This chapter is deeply problematic since the paradigm under which Bauman frames his answers is contestable. In Bauman's understanding of things, India is like America a secular democracy, Hinduism in India is a monolith like Christianity in America and then there are the intolerant religions like Islam or fundamentalist Christianity in America and Pentecostal Christianity in India, with the good, nice, secular people in both America and India having to manage these intolerant bigots who are using the very freedom provided by peaceful majorities to sabotage secular tolerance. The only condemnable part in Bauman's view is physical violence against Christians. While it is true, that the role of the state as enshrined in the Indian constitution, enjoining it to prevent violence and avoiding discrimination can be the only legitimate expectation from the Christian minority. It is also important that in places like India, where state institutions are weak and malleable, to confront world-views which inevitably cause eventual physical violence. One reason probably for Bauman's problematic world-view is because caste is not a lived experience for him, but something he theoretically tries to understand and incorporate into his logic. The second reason, is probably because since he is a Western, Christian, first world scholar parachuting to a third world nation, which brings with it all the attendant background noise of colonialism, racism and so on, he wants to appear even handed and appreciate what he thinks is the dominant culture of his hosts. But nevertheless we have to appreciate Bauman for venturing into an area that very few social science scholars do, and that is to give a personal opinion and solution on the subject that he is investigating.  

    To contest the unreasonableness of Bauman's worldview, I would like to continue with the story of Syrian Christians  that Bauman narrates here. Syrian Christians who were considered a ritually pure community began to lose their high-caste status when under the influence of the Portugese first and then the British moved away from participation in temple rituals. By mid nineteenth century, Upper Castes were treating them like a ritually polluting caste. Syrian Christians got back their high-caste standing since the late 19th century by cultivating ritual connection with their Hindu neighbors through the adoption of high-caste Hindu practices involving, among other things, temple festivals and lif-cycle rituals.According to Bauman this high caste status has given them protection from prevalent Anti-Christian sentiments. What does this imply?. Even in the pre-modern era , being alienated or having an identity that rejected temples (representing Hindu Brahmin religion) was not just ritually polluting but also ensued subsequent loss of economic and political power. Could we imagine then, this constructed "Hindu" identity of the modern era as a continuity from the pre-modern.The repercussions are just the same. Lack of participation in the "Hindu" identity that is conflated with the Indian identity makes Christians and Muslims "second-class" citizens with the concomitant loss of political and cultural power. It is here that Pentecostal Christians differ from votaries of mainstream "Hinduness". Pentecostal Christianity for all it's religious intolerance is not angling for political power and the resultant ability to marginalize people. Pentecostal Christian religion might call your "god" a man-made idol or still worse a demon, but it is not going to burn your house and throw you out. Anyone who doubts this, just has to google "Muslims and India". To find moral equivalence between two ideologies both vying for different things, incomparable in the social status of its practitioners (Priveleged uppercastes on the one hand and mostly untouchables and tribals on the other hand), with repercussions that are not at all comparable, is to me against all sense of fairplay and justice. Should we call it Cruel?. 

    To me, Bauman is fixated on asking the wrong questions "Are Pentecostals Provocative?". "Do Pentecostals invite the violence that befalls them?" and so on. Provocation is itself a loaded word with very subjective answers dependent on time and place. It is my personal belief that indigenous communities or castes will be able to solve their issues when left to themselves. Pentecostal Christianity with it's belief of the supernatural, demons, emotional meltdowns, miracles, corporate worship and healing is rooted in many ways closer to the psyche of people than we would acknowledge. As I mentioned before, it is the language of "Hindu" identity and aggression developed in cultures and places "far off", with national-level actors who bring to a localized conflict an edge and a sophistication that it would never have on its own, who seem to be the problem. To come back to Kanyakumari district, local Sangh workers faced with the failure of a vocabulary to effectively confront Pentecostal religion as well as the inability to use the power of the state, have started to critique Christianity. Some of their popular criticisms that I know are, "What God is he, if he cannot remove two nails and set himself free", "The Virgin birth of Jesus", comparing the boisterousness and happiness of Hindu temple worship against the crying and sadness of Pentecostal worship. This I believe is a healthy way of solving conflict. Words that are being replied with words and not violence. 

    This book for all its weaknesses is a very needed and useful one, setting up a template for further study. In this period of growing intolerance in India and deliberate propagation of misinformation, a book like this performs a valuable service.    



Labels: